ஆசிய கோப்பையில் விராட் கோலி எப்படி ஆடுவார்? – கோலியின் டி20 உ.கோ இடம் குறித்து கங்குலி பேசியது என்ன?

Ganguly
- Advertisement -

வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முக்கிய வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த தொடரிலிருந்து இறுதிக்கட்ட உலகக்கோப்பை அணி தேர்வு செய்யப்பட உள்ளதால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.

kohli

- Advertisement -

அவர்களை விட கடந்த 2019க்குப்பின் தினந்தோறும் விமர்சனங்களை சந்தித்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு தன் மீதான விமர்சனங்களை துடைக்க வேண்டிய நிலைமையில் உள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் சுமார் கடந்த 3 வருடங்களாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

கடுமையான விமர்சனம்:
2017 முதல் 3 வகையான இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் செய்து வந்த கேப்டன்ஷிப் அதற்கு தடையாக இருந்ததால் அதையும் படிப்படியாக ராஜினாமா செய்து சுதந்திர பறவையாக விளையாட துவங்கிய அவர் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது, சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு அரைசதம் கூட அடிக்காதது என முன்பை விட சுமாராக செயல்படுகிறார். அதனால் காத்திருந்து காத்திருந்து கடுப்பான கபில் தேவ் போன்ற முன்னாள் வீரர்கள் அவரை அணியிலிருந்து நீக்குமாறு வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்கள்.

Kohli

அதுபோக இந்த கடினமான தருணத்திலிருந்து வெளிவர சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ஆலோசனை கொடுத்த ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்களின் பேச்சை கேட்காத விராட் கோலி தொடர்ந்து விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்தார். ஆனால் சொன்னது போல் தொடர்ந்தும் விளையாடாமல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மட்டும் விளையாடிவிட்டு வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுக்கும் அவர் இதுவே ஐபிஎல் தொடராக இருந்தால் இப்படி செய்வாரா என அதற்காக தனி விமர்சனத்தை சந்தித்தார்.

- Advertisement -

ஆதரவும் கட்டாயமும்:
இருப்பினும் இங்கு ஜாம்பவான்கள் என்ற பெயருடைய நிறைய முன்னாள் வீரர்கள் 70 சதங்களை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என்பதால் தகுதியற்றவர்கள் விமர்சிக்காமல் அமைதியாக இருந்தாலே விராட் கோலி பார்முக்கு திரும்பிவிடுவார் என்ற வகையில் கெவின் பீட்டர்சன், ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா போன்ற வெளிநாட்டு ஜாம்பவான்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். மேலும் ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்தவர் என்பதாலேயே பார்ம் என்பதை காரணமாக காட்டி இதுவரை அணி நிர்வாகமும் அவரை நீக்காமல் கேட்கும்போதெல்லாம் ஓய்வு கொடுத்து ஆதரவளித்து வருகிறது.

Kohli

ஆனால் கடந்த 3 வருடங்களாக ஏராளமான வாய்ப்புகளையும் ஆதரவையும் கொடுத்தும் பார்முக்கு திரும்பாத அவருக்கு போட்டியாக தீபக் ஹூடா போன்ற அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் வந்துள்ளனர். எனவே விமர்சனங்களை உடைத்து டி20 உலக கோப்பையில் எந்தவித கேள்வியும் இல்லாமல் இடம் பிடிக்க கடைசி வாய்ப்பாக கருதப்படும் இந்த ஆசிய கோப்பையில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பங்கேற்கும் விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

லாஸ்ட் சான்ஸ்:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரை நல்ல பயிற்சி எடுத்து போட்டிகளில் விளையாட விடுங்கள். மிகப்பெரிய வீரரான அவர் ஏராளமான ரன்களை குவித்துள்ளார். எனவே அவர் இந்த தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று நான் மிகவும் நம்புகிறேன். இந்த காலங்களில் அவரால் சதமடிக்க முடியவில்லை என்பது மட்டுமே குறையாக உள்ளது. இருப்பினும் இந்த ஆசிய கோப்பையில் அவர் தன்னுடைய பார்மை மீட்டெடுப்பார் என்று இன்னும் நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க : ஏபிடி மாதிரி அசத்தும் அவருக்கு அதுதான் சரியான பேட்டிங் இடம் – ஆஸி ஜாம்பவான் பாரட்டிய இந்திய வீரர்

அவர் கூறுவது போல இடையிடையே 40, 70 போன்ற ரன்களை அடித்து வரும் விராட் கோலி 2020 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் இப்போதும் டாப் 3 பட்டியலில் உள்ளார். அந்தளவுக்கு ஆரம்ப காலத்தில் அபாரமாக செயல்பட்டு தனக்கென்று தங்கமான தரத்தை உருவாக்கியுள்ள அவருக்கு விமர்சனத்தை மிஞ்சிய ஆதரவு கிடைத்திருப்பதால் அதை இந்த ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement