ஏபிடி மாதிரி அசத்தும் அவருக்கு அதுதான் சரியான பேட்டிங் இடம் – ஆஸி ஜாம்பவான் பாரட்டிய இந்திய வீரர்

- Advertisement -

வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடும் தரமான இந்திய அணியை கண்டறியும் வேலைகளில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதற்காக ஐபிஎல் தொடருக்கு பின் பங்கேற்ற தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்களில் நிறைய வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளித்து வரும் அணி நிர்வாகம் அதற்காக விமர்சனங்களையும் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறது. அதில் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, இஷான் கிசான் போன்ற வீரர்கள் தயாராக இருக்கும்போது தேவையின்றி சூரியகுமார் யாதவை தொடக்க வீரராக களமிறக்கிய முடிவு முக்கியமானதாகும். ஏனெனில் கடந்த 2021இல் அறிமுகமான அவர் பெரும்பாலும் மிடில் ஆர்டரில் 4வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் இதுவரை அவர் களமிறங்கிய 15 இன்னிங்சில் 4வது இடத்தில் 6 இன்னிங்ஸ்சில் 195 ரன்களை 199 என்ற ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கியுள்ளார். அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் எஞ்சிய அனைத்து வீரர்களும் சொதப்பிய நிலையில் தனி ஒருவனாக சதமடித்து 117 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடியது அனைவரின் பாராட்டுகளை பெற்றது. அப்படிப்பட்ட அவரை நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் தேவையின்றி தொடக்க வீரராக களமிக்கியதில் முதல் 2 போட்டிகளில் அவர் தடுமாறியதால் அந்த முடிவை எடுத்த ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் விமர்சனங்களை சந்தித்தனர்.

இந்தியாவின் ஏபிடி:
இருப்பினும் 3வது போட்டியில் ரோகித் சர்மா காயத்தால் வெளியேறியபோது அதிரடியாக பேட்டிங் செய்த அவர் வெற்றிபெற வைத்து ஆட்ட நாயகன் விருது வென்று தம்மால் அனைத்து இடத்திலும் பேட்டிங் செய்ய முடியும் என்று நிரூபித்தார். அதைவிடர் பவுன்ஸ் ஆகி வரும் பந்தை பேக் லிப்ட் முறையில் பறக்கவிட்ட சிக்ஸரையும் பந்துக்கு கீழே வந்து கீப்பருக்கு மேலே தெறிக்கவிட்ட பவுண்டரியையும் பார்த்து ரசிகர்கள் சிலிர்த்துப் போனார்கள். அப்படி தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் போல மைதானத்தின் நாலா புறங்களிலும் அனைத்து சூழ்நிலைகளிலும் அனைத்து இடங்களிலும் அதிரடியாக விளையாடும் திறமை பெற்றுள்ள அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

Suryakumar yadhav

இந்நிலையில் தற்போது உச்ச கட்ட பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் போல செயல்படுவதாக பாராட்டும் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் அவரை குழப்பமின்றி 4வது இடத்தில் விளையாட வைப்பதே சரியான முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த சில தொடர்களில் மற்ற இந்திய வீரர்களைக் காட்டிலும் அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே அவர் டாப் 4 இடத்தில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“அதேபோல் விராட் கோலியை அவர் காலம் காலமாக விளையாடி வரும் 3வது இடத்தில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கொடுங்கள் எனக்கூறுவேன். மறுபுறம் சூர்யா 1, 2 அல்லது 4வது இடத்தில் விளையாடலாம். அவரால் தொடக்க வீரராகக் களமிறங்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் புதிய பந்திலிருந்து அவரை விலக்கி வைத்து பவர்பிளே ஓவர்களுக்குப் பின் மிடில் ஓவர்களில் களமிறங்கி கடைசிவரை பேட்டிங் செய்யும் வாய்ப்பு கொடுத்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்”

Ponting

“அந்த வகையில் ஓபனிங்கில் அவர் களமிறங்க தகுதியானவர் என்றாலும் அங்கு அவர் விளையாட நான் விரும்பவில்லை. எனவே அவருக்கு 4வது இடம் கச்சிதமாக பொருந்தும் என்று நினைக்கிறேன். சூர்யா தன்னுடைய நல்ல பார்மில் இருக்கும்போது சற்று ஏபி டிவிலியர்ஸ் போல மைதானத்தின் 360 டிகிரிகளிலும் அடிக்க முடிகிறது. லேப் ஷாட், லேட் கட் போன்ற ஷாட்களை அடிக்கும் அவர் கீப்பரின் தலைக்கு மேலே ரேம்ப் ஷாட், டவுன் தி க்ரௌண்ட் என அனைத்து வகைகளிலும் அடிக்கிறார்”

- Advertisement -

“அதேபோல் லெக் சைட் திசைக்கு மேற்புறத்திலும் டீப் பேக்வார்ட் ஸ்கொயர் பகுதிகளிலும் அற்புதமாக பேட்டிங் செய்கிறார். அதுபோக வேகம் மற்றும் சுழல் என 2 வகையான பந்து வீச்சையும் சிறப்பாக எதிர்கொள்ளும் திறமையும் பெற்றுள்ளார்” என்று பாராட்டினார்.

இதையும் படிங்க : IND vs ZIM : இந்திய வீரர்களின் அந்த வீக்னஸை வைத்தே அவர்களை தோற்கடிப்போம் – ஜிம்பாப்வே வீரர் நம்பிக்கை

அவர் கூறுவது போல ஓபனிங் இடத்தை விட மிடில் ஆர்டரில் இதுவரை அவர் களமிறங்கிய 15 இன்னிங்சில் மிடில் ஓவர்களில் 166 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை விளாசும் சூர்யகுமார் யாதவ் கடைசி கட்ட ஓவர்களில் 258.8 என்ற தெறிக்கவிடும் ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்பவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement