IND vs ZIM : இந்திய வீரர்களின் அந்த வீக்னஸை வைத்தே அவர்களை தோற்கடிப்போம் – ஜிம்பாப்வே வீரர் நம்பிக்கை

INDvsZIM
- Advertisement -

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. விரைவில் ஆசிய கோப்பை நடைபெறுவதால் அதற்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள இந்த தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்தியா களமிறங்குகிறது. வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெறும் இந்த தொடருக்காக ஏற்கனவே அங்கு சென்றுள்ள இந்திய அணியினர் தற்போது வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் தரமான வீரர்களுடன் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஜிம்பாப்வே சமீப காலங்களில் திறமையான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் திண்டாடி வருகிறது.

INDvsZIM

- Advertisement -

எனவே கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அந்த அணிக்கு எதிராக நடைபெறும் இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதைவிட வலுவான வெஸ்ட் இண்டீஸை சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை வைத்து வரலாற்றிலேயே முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து இந்தியா சாதனை படைத்தது. அந்த தொடரில் இடம் பிடித்த பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரிலும் இருப்பதால் நல்ல பார்முடன் புத்துணர்ச்சியுடன் இருக்கும் இந்தியா இந்த தொடரிலும் ஒயிட்வாஷ் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

பார்மில் ஜிம்பாப்வே:
இருப்பினும் சொந்த மண்ணில் சில நேரங்களில் எலியும் புலியாக செயல்படும் என்ற வகையில் கடந்த வாரம் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அட்டகாசமாக செயல்பட்ட ஜிம்பாப்வே 2 – 1 (3) என்ற கணக்கில் 2 தொடர்களையும் வென்று அசத்தியது. எனவே அந்த புத்துணர்ச்சியுடன் நல்ல பார்மில் இருக்கும் அந்த அணியும் சொந்தமண் சாதத்துடன் சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் வலுவான இந்தியாவை தோற்கடிக்க போராட உள்ளது.

INDvsZIM

மேலும் வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த சிகந்தர் ராசா, இன்னசென்ட் கயா, கேப்டன் சகப்வா, ரியன் புர்ள் போன்ற வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு சவாலை கொடுக்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் விளையாட போகும் இந்திய வீரர்களின் பலவீனங்களை சமீபத்திய போட்டிகளில் அவர்கள் விளையாடிய வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் செயல்பட்டு இந்தியாவை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளதாக நட்சத்திர ஜிம்பாப்வே வீரர் சிகந்தர் ராசா கூறியுள்ளார்.

- Advertisement -

வீடியோவை பார்த்து:
வங்கதேசத்துக்கு எதிரான 2 தொடர்களையும் வெல்வதற்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய இவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் (இந்திய வீரர்களின்) வீடியோக்களை பார்த்து அலசி ஆராய உள்ளோம். அதற்கேற்றார் போல் பேட்டிங் – பவுலிங் என 2 துறைகளிலும் எங்களது வீரர்கள் தனி நபராக குறிப்பிட்ட சிலர் தனிநபர் இந்திய வீரர்களுக்கு எதிராக திட்டங்களை வகுக்க உள்ளோம். இந்தியா தரமான அணி என்பதில் சந்தேகமில்லை. எனவே போட்டி நாளன்று எங்களது வியூகங்களை களத்தில் வெற்றிகரமாக செயல் படுத்த முயற்சிக்க உள்ளோம். அந்த வகையில் எங்களது வியூகங்கள் எதிரணியை வீழ்த்தும் என்று நம்புகிறோம், அதுதான் முக்கியம்”

Shikandar Raza Ban vs ZIM

“ஒவ்வொரு தொடரையும் நாங்கள் வெல்வோம் என்று நம்புகிறோம். ஏனெனில் நீங்கள் நம்பிக்கையுடன் இல்லை என்றால் அடிப்படையில் அடி அங்கு வாங்குவதற்காக செல்வதாக அமையும். நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டை அப்படி விளையாடக்கூடாது. சமீபத்தில் சில நல்ல தொடர்களை நாங்கள் பெற்றிருப்பது மனதளவில் உதவியாக இருக்கிறது. எனவே இந்திய தொடரையும் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இது நல்ல தரமான பொழுதுபோக்கு தொடராக இருக்கும் என்பதால் இதில் எவ்வாறு செயல்படுகிறோம் என்று பார்ப்போம்” எனக்கூறினார்.

இதையும் படிங்க : என்ன ஆனாலும் அதை மட்டும் விட்றாதீங்க – தடுமாறும் உம்ரான் மாலிக்க்கு ஆஸி ஜாம்பவான் ஆதரவுடன் கோரிக்கை

பலவீனமான அணியாக இருந்தாலும் இந்தியாவுக்கு கடும் சவாலை கொடுக்கும் வகையில் இந்த தொடரில் வெற்றிக்காக போராடுவோம் என்று சமீபத்தில் ஜிம்பாப்வே தலைமை பயிற்சியாளர் தேவ் ஹூக்டன் நம்பிக்கையுடன் தெரிவித்திருந்த நிலையில் மற்றொரு ஜிம்பாப்வே வீரர் இன்னசென்ட் கயா 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியாவை இந்த தொடரில் தோற்கடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அந்த நிலையில் இந்த முக்கிய வீரரும் இந்தியாவை தோற்கடிப்போம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement