என்ன ஆனாலும் அதை மட்டும் விட்றாதீங்க – தடுமாறும் உம்ரான் மாலிக்க்கு ஆஸி ஜாம்பவான் ஆதரவுடன் கோரிக்கை

Umran Malik Rahul Dravid
- Advertisement -

வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் பங்கேற்ற இந்தியா அதில் தோல்வியடையாமல் வெற்றிநடை போட்டு வருகிறது. உலகக்கோப்பையில் விளையாடும் தரமான வீரர்களை தேர்வு செய்யும் வகையில் மேற்கூறிய தொடர்களில் ஐபிஎல் 2022 தொடரில் அசத்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அதில் கடந்த வருடம் ஒருசில போட்டிகளிலேயே அதிரடி வேகத்தில் பந்து வீசி அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வீரர் உம்ரான் மாலிக் இந்த வருடம் ஹைதராபாத் அணிக்கான 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டு முழுமையான 14 போட்டிகளில் வாய்ப்பு பெற்றார்.

- Advertisement -

அதில் 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்து நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டார் என்பதுடன் கடந்த வருடத்தை விட இந்த வருடம் வேகத்தை அதிகப்படுத்தி 145 – 150 கி.மீ வேகத்தில் மிரட்டலாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்களை பறக்க விட்டார். குறிப்பாக 157.0 கி.மீ வேகப்பந்தை வீசி ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலர் என்ற சாதனை படைத்த அவர் இந்திய ஆடுகளங்களிலேயே டி20 இப்படி மிரட்டுகிறார் என்றால் வேகத்திற்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலியாவில் நிச்சயம் அசத்துவார் என்ற நம்பிக்கையில் டி20 உலக கோப்பையில் தேர்வு செய்ய வேண்டுமென்று ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

தடுமாறும் உம்ரான்:
இருப்பினும் வேகத்திற்கு ஈடாக 9.03 என்ற எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கிய அவரை 2 – 3 வருடங்கள் சிறப்பாக செயல்படாமல் வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்று கபில் தேவ் எச்சரித்திருந்தார். இருப்பினும் இந்திய அணியில் இவ்வளவு வேகத்தில் பந்து வீசக்கூடியவர் இல்லை என்ற கண்ணோட்டத்தில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாய்ப்பளிக்கவில்லை. அதன்பின் நடந்த அயர்லாந்து தொடரில் விவிஎஸ் லக்ஷ்மன் – ஹர்திக் பாண்டியா ஆகியோர் நம்பி வாய்ப்பளித்ததில் ரன்களை வாரி வழங்கிய அவர் இங்கிலாந்து தொடரின் கடைசி போட்டியிலும் மோசமாக பந்து வீசினார்.

Umran Malik

இதுவரை 3 போட்டிகளில் 2 விக்கெட்களை 12.44 என்ற மோசமான எக்கனாமியில் பந்து வீசியுள்ள அவர் நல்ல லைன், லென்த், வேரியேஷன் போன்ற அம்சங்களில் முன்னேறாமல் இனிமேல் வாய்ப்பில்லை என்று வகையில் நீக்கப்பட்டுள்ளதால் வந்த வேகத்திலேயே இந்திய அணியிலிருந்து காணாமல் போயுள்ளார். இதனால் வேகத்தை குறைத்து விவேகமாக பந்துவீசமாறு பெரும்பாலனவர்கள் உம்ரான் மாலிக்க்கு ஆலோசனை தெரிவிக்கும் நிலையில் சிறப்பாக செயல்படுவதற்காக வேகத்தை குறைக்கக் கூடாது என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் கூறியுள்ளார்.

- Advertisement -

வேகத்தை குறைக்காதிங்க:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அதிரடியான வேகம் என்பது தனித்துவமானது. ஒருவருக்கு நீங்கள் 150+ கி.மீ வேகத்தில் எப்படி பந்துவீச வேண்டுமென்று கற்றுக்கொடுக்க முடியாது. மேலும் கட்டுப்பாட்டுக்காக வேகத்தை குறைக்கும் பவுலர்களை நான் வெறுக்கிறேன். மாறாக கட்டுப்பாட்டுக்காக வலை பயிற்சியில் அதிக நேரங்கள் செலவழித்து அதே வேதத்தில் எப்படி பந்து வீசலாம் என்று முயற்சிக்கும் பவுலர்களை விரும்புகிறேன். ஏனெனில் 150 வேகத்தில் வீசும் பவுலர்கள் மிகவும் அரிதானவர்கள். எனவே எக்ஸ்பிரஸ் பவுலர்கள் தங்களது வேகத்தை குறைப்பதை நான் விரும்பவில்லை. நான் உம்ரான் மாலிக்கை அதிகம் பார்த்ததில்லை. ஆனால் அவர் சிறப்பான வேகத்தில் பந்து வீசுவது என்னை மிகவும் கவர்ந்துள்ளது” என்று கூறினார்.

Mcgrath

சோயப் அத்தர் போன்ற பவுலர்கள் கடைசிவரை வேகத்தை குறைக்காமலேயே வெற்றிகரமாக செயல்பட்டதை போல் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் வேகத்தை குறைக்கக் கூடாது என்று மெக்ராத் கேட்டுக் கொண்டுள்ளார். எம்ஆர்எஃப் பேஸ் பவுண்டேஷனின் இயக்குனராக இருக்கும் அவர் உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் மனதளவில் உறுதியாக இருப்பதே வெற்றிக்கான வழி என்று ஆதரவு தெரிவித்துப் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்பார்க்கிறோம். ஏனெனில் 130 வேகத்தில் வீசும் பவுலரை 150 வேகத்தில் வீச வைக்க முடியாது. எனவே உயரமான வேகத்தில் இருக்கும் பவுலர்கள் பவுன்ஸ், வேகம், ஸ்விங் போன்ற அம்சங்கள் கூடிய வேகப்பந்து வீச்சாளர்களை கண்டுபிடிப்பது கடினமாகும்.

இதையும் படிங்க : IPL 2023 : ட்ரேடிங் விண்டோ மூலம் வெளியேறப்போகும் ஜடேஜாவை தட்டி தூக்க காத்திருக்கும் 3 அணிகள் – லிஸ்ட் இதோ

வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது உடலை வலிக்கு உட்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டியுள்ளது. சாதாரண வீரர் மற்றும் சிறந்த வீரர் ஆகியோருக்கிடையே இருக்கும் வித்தியாசத்தை போலவே சாதாரண பவுலருக்கும் சிறந்த பாஸ்ட் பவுலர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் அவர்களின் மன வலிமையை பொருத்ததாகும்” என்று கூறினார்.

Advertisement