IPL 2023 : ட்ரேடிங் விண்டோ மூலம் வெளியேறப்போகும் ஜடேஜாவை தட்டி தூக்க காத்திருக்கும் 3 அணிகள் – லிஸ்ட் இதோ

Jadeja
Advertisement

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பங்கேற்ற குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதே வேளையில் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய சரிவினை சந்தித்தது. இந்த சீசன் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் தொடர்ச்சியாக சென்னை அணி தோல்வியை சந்திக்கவே மீண்டும் கேப்டனாக தோனியே பொறுப்பேற்றார்.

Jadeja

இப்படி சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டதன் காரணமாக அவருக்கும், அந்த அணியின் நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து ஜடேஜாவிற்கும் நிர்வாகத்திற்கும் இடையேயான மோதல் முற்றியதால் அவர் சமூக வலைதள பக்கத்தில் சென்னை அணியை பின்தொடர்வதை நிறுத்தினார். அதனை தொடர்ந்து நாளுக்கு நாள் பிரச்சனை தீவிரமடையவே தற்போது ஜடேஜா இந்த ஆண்டு சென்னை அணியில் இருந்து டிரேடிங் விண்டோ மூலம் வெளியேறுகிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

- Advertisement -

அதன்படி அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் தன்னை வாங்க விருப்பப்பட்டால் தேர்வு செய்து கொள்ளலாம் என்று ஜடேஜா முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆண்டு சென்னை அணியில் ஜடேஜா விளையாட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஒருவேளை அவர் சென்னை அணியை விட்டு வெளியேறினால் எந்த அணிகள் அவரை எடுக்க தீவிரம் காட்டும் என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.

குஜராத் டைட்டன்ஸ் : ஜடேஜாவின் சொந்த மாநிலமான குஜராத்திற்காக அவர் விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதேபோன்று கடந்த ஆண்டு கூட ஜடேஜா குஜராத் தலைமையிலான அணியை தலைமை தாங்கப்போகிறார் என்ற வதந்தி கூட பரவியது. ஆனால் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் குஜராத் அணி கட்டமைக்கப்பட்டு கோப்பையையும் வென்றது.

- Advertisement -

இந்நிலையில் ஒருவேளை சிஎஸ்கே அணியில் இருந்து ஜடேஜா வெளியேறினால் அவரை குஜராத் அணி தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இரு தரமான ஆல்ரவுண்டர்கள் ஒரே அணியில் விளையாடுவது அந்த அணிக்கு பலத்தை தரும் என்கிற காரணத்தினால் குஜராத் அணி அவரை வாங்க வாய்ப்பு உள்ளது.

Jadeja

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணியில் தீபக் ஹூடா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், க்ருனால் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும் அவர்களிடம் இருந்து பெரிய ஆட்டம் வெளிப்படவில்லை. எனவே இந்த மூவரில் ஒருவருக்கு பதிலாக ஜடேஜா அந்த அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதேபோன்று பிளேயிங் லெவனிலும் அவரை எளிதாக இணைக்க முடியும் என்பதனால் ஜடேஜா ஒரு மிகச்சிறந்த சொத்தாக லக்னோ அணிக்கு மாற வாய்ப்பு இருப்பதால் அவரை தேர்வு செய்ய லக்னோ அணியும் முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிங்க : IND vs ZIM : இந்திய நேரப்படி போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும் – எந்த சேனலில் பார்க்கலாம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் : கடந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இருந்த ஒரே ஒரு பிரச்சனை சரியான ஃபினிஷர் இல்லை என்பது மட்டும்தான். ஏனெனில் ஒரு சில போட்டிகளில் ரவிச்சந்திரன் அஷ்வின் பினிஷராக ராஜஸ்தான் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அதேபோன்று அந்த அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான ஹெட்மயராலும் சரியாக பினிஷிங் செய்ய முடியவில்லை. ஜாஸ் பட்லரை சுற்றியே அந்த அணி சுழல்வதாகவும் ஒரு பேச்சு இருந்து வருகிறது. இதன் காரணமாக ஜடேஜா அந்த அணிக்கு பினிஷர் ரோலில் பொருத்தமாக இருப்பார் என்பதனால் அவரை தேர்வு செய்ய ராஜஸ்தான் அணியும் முனைப்பு காட்டும் என்று கூறப்படுகிறது.

Advertisement