IND vs ZIM : இந்திய நேரப்படி போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும் – எந்த சேனலில் பார்க்கலாம்?

INDvsZIM RAHUL
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுதினம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி துவங்குகிறது. ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது கே.எல் ராகுலின் தலைமையில் அண்மையில் அறிவிக்கப்பட்டது. முதன்மை இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை தொடருக்காக தயாராகி வரும் வேளையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது இந்த தொடரை எதிர்கொள்ளதால் இந்த தொடரின் மோதும் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

INDvsZIM

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் இந்த ஒருநாள் தொடரானது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதன்படி இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 18-ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 22-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான மூன்று போட்டிகளுமே ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே நகரின் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND

இந்த மூன்று ஒருநாள் போட்டிகளுமே இந்திய நேரப்படி பகல் 12.45 மணிக்கு துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை சோனி குழும நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் சோனி குழும தொலைக்காட்சிகளில் இந்த ஒருநாள் தொடரை நேரடியாக கண்டு களிக்கலாம்.

- Advertisement -

அதோடு ஆன்லைனில் இந்த போட்டிகளை காண விரும்புவோர் சோனி லைவ் ஆப் மூலம் போட்டிகளை நேரலையில் கண்டு களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : IND vs ZIM : துவக்க வீரர்களாக எந்த இருவர் களமிறங்கினால் நல்லா இருக்கும் – முன்னாள் தே.கு உறுப்பினர் பேட்டி

1) கே.எல் ராகுல் (கேப்டன்), 2) ஷிகார் தவான் (து.கேப்டன்), 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) சுப்மன் கில், 5) ராகுல் திரிபாதி, 6) தீபக் ஹூடா, 7) வாஷிங்டன் சுந்தர் (காயம் காரணமாக விலகல்), 8) அக்சர் படேல், 9) இஷான் கிஷன், 10) சஞ்சு சாம்சன், 11) ஷர்துல் தாகூர், 12) குல்தீப் யாதவ், 13) ஆவேஷ் கான், 14) பிரசித் கிருஷ்ணா, 15) முகமது சிராஜ், 16) தீபக் சாஹர்.

Advertisement