IND vs ZIM : துவக்க வீரர்களாக எந்த இருவர் களமிறங்கினால் நல்லா இருக்கும் – முன்னாள் தே.கு உறுப்பினர் பேட்டி

Dhawan-IND-Team
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுதினம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஜிம்பாப்வேயில் துவங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அடுத்த சில தினங்களிலேயே காயத்திலிருந்து மீண்டு வந்த கே.எல் ராகுல் ஆசியக் கோப்பையில் நேரடியாக இடம் பிடித்திருந்தால் அவர் மீது விமர்சனம் எழவே அவர் இந்த ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் அவசர அவசரமாக சேர்க்கப்பட்டு கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

INDvsZIM

- Advertisement -

இந்நிலையில் கே.எல் ராகுல் தலைமையில் இந்திய அணி இந்த ஜிம்பாப்வே தொடரை எதிர்கொள்ள உள்ளது. இதன் காரணமாக இந்த தொடரில் ராகுலின் ஆட்டம் எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது. அதேபோன்று ஏற்கனவே அணியில் சீனியர் வீரரான ஷிகார் தவான் மற்றும் இளம் வீரரான சுப்மன் கில் ஆகியோர் இருப்பதினால் இந்த மூன்று வீரர்களில் எந்த இருவர் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்றினை அளித்திருந்த முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினரான தேவங் காந்தி இந்திய அணியின் துவக்க வீரர்கள் குறித்த பிரச்சனை குறித்து பேசிய போது கூறியதாவது : இந்திய அணியின் நிர்வாகத்தால் தற்போது சுப்மன் கில் சிறப்பான முறையில் வளர்க்கப்பட்டு வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது.

Shubman Gill 98

எனவே ஜிம்பாப்வே தொடரிலும் அவர் நிச்சயம் இந்திய அணியில் விளையாட வேண்டும். ஆனால் தவான் மற்றும் ராகுல் ஆகியோரது ஜோடி இருப்பதினால் அவர்களே துவக்க வீரர்களா களம் இறங்குவார்கள். சுப்மன் கில்லை 3-ஆவது இடத்தில் களமிறக்கி அவரை பரிசோதிக்கலாம். ஏனெனில் ஓப்பனர் அவுட் ஆனதும் உடனே களமிறங்கி விளையாடுவது என்பதில் மிகப்பெரிய சவால் இருக்கிறது.

- Advertisement -

அதனை சுப்மன் கில் சமாளித்து விட்டால் நிச்சயம் எதிர்கால இந்திய அணியின் நம்பகத் தகுந்த வீரராக மாறுவார். இந்த ஜிம்பாப்வே தொடரில் தவான் மற்றும் ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாகவும், சுப்மன் கில் மூன்றாவது இடத்திலும் களமிறங்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

இதையும் படிங்க : IND vs ZIM : ஜிம்பாப்வே தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய இளம்வீரர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

சுப்மன் கில் மூன்றாம் இடத்தில் களமிறங்குவது தற்காலிகமானது தான். பின்னர் தொடர்ச்சியாக தனது திறனை அவர் நிரூபித்து வந்தால் மீண்டும் அவர் நிரந்தர ஓப்பனராகவும் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பும் விரைவில் கிடைக்கும் என தேவங் காந்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement