IND vs ZIM : ஜிம்பாப்வே தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய இளம்வீரர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

INDvsZIM
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜிம்பாப்வே நாட்டில் உள்ள ஹராரே நகரில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே பிசிசிஐ-யை மூலம் அறிவிக்கப்பட்டது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை கே.எல் ராகுல் கேப்டனாக வழிநடத்துகிறார். அனுபவ வீரரான ஷிகார் தவான் துணை கேப்டனாகவும் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

INDvsZIM

- Advertisement -

இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

அதோடு ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த தொடர் நடைபெற உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தற்போது காயம் காரணமாக விலகி உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sundar-1

இந்த ஆண்டு பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அதன் பின்னர் தொடர்ச்சியாக காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் தவித்து வந்தார். அண்மையில் காயத்திலிருந்து மீண்ட வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து சென்று கவுண்டி போட்டியில் விளையாடி வந்த வேளையில் தற்போது மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் கலந்து கொண்ட விளையாடி வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்ட வேளையில் தற்போது தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த ஒருநாள் தொடரையும் தவறவிடுகிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : திறமை இருந்தும் சமீப காலங்களில் அணியில் இடத்தை தக்கவைக்க தவறிய 5 இளம் இந்திய வீரர்களின் பட்டியல்

தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகள், நான்கு ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement