திறமை இருந்தும் சமீப காலங்களில் அணியில் இடத்தை தக்கவைக்க தவறிய 5 இளம் இந்திய வீரர்களின் பட்டியல்

Shaw
- Advertisement -

இந்தியாவில் விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் சர்வதேச அளவில் தேசத்துக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைக்கின்றனர். இருப்பினும் இந்தியா போன்ற 100+ கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைத்துக்குமே போட்டி நிலவும் என்ற நிலைமையில் கிரிக்கெட்டிலும் வெறும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் ஒரு இடத்துக்கு விளையாட ஒரே சமயத்தில் 4 – 5 பேர் போட்டி போடுவது வழக்கமாகும். ஏனெனில் ரஞ்சி கோப்பை எனும் ஒரு தொடரிலேயே ஒரே சமயத்தில் 38 அணிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டி போடுகிறார்கள். இருப்பினும் தங்களது திறமையால் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் வீரர்கள் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்து தேசத்துக்காக விளையாட தேர்வு செய்யப்படுகிறார்கள்.

IND

- Advertisement -

அப்படி கடின உழைப்பால் கனவு பயணத்தின் முதல் வெற்றியை தொடும் இளம் வீரர்கள் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு நிரந்தர இடத்தை பிடித்துள்ள நட்சத்திர வீரர்களை கடந்து பெஞ்சில் காத்திருந்து ஒருவழியாக விளையாடும் 11 பேர் அணியில் கனவு தொப்பியுடன் அறிமுகமாகி விளையாடத் துவங்குவார்கள். அதில் அறிமுக போட்டியிலேயே சிறப்பாக செயல்பட தவறினாலும் அடுத்து கொடுக்கப்படும் குறிப்பிட்ட சில வாய்ப்புகளில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டால் தான் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்று தொடர்ச்சியாக விளையாட முடியும்.

தவறவிட்ட வீரர்கள்:
அதில் சமீப காலங்களில் வாய்ப்பு பெற்ற ஆரம்ப போட்டிகளிலேயே தங்களது திறமையை வெளிப்படுத்தி நீண்டகாலம் விளையாடுவார்கள் என்று நம்பிக்கையை ஊட்டிய சில இளம் வீரர்கள் நாளடைவில் சுமாராக செயல்பட்டு தற்போது இந்திய அணியிலிருந்து விலகி இருக்கின்றனர். அது போன்ற வீரர்களைப் பற்றி பார்ப்போம்:

Saini

5. நவ்தீப் சைனி: ஹரியானாவைச் சேர்ந்த இவர் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அதிரடியான வேகத்தில் பந்து வீசியதால் கடந்த 2019இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற இவர் 2 டெஸ்டில் 4 விக்கெட்டுகளையும் 6 ஒருநாள் போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் எடுத்த நிலையில் 2021இல் இலங்கையில் பங்கேற்ற தொடரின்போது காயமடைந்து வெளியேறினார்.

- Advertisement -

அதன்பின் குணமடைந்த அவருக்கு பதிலாக வேறு இளம் வீரர்கள் அவரது இடத்தை பிடித்த நிலையில் இவர் ஐபிஎல் தொடரில் சற்று ரன்களை வாரி வழங்கும் பவுலராக செயல்படுகிறார். அதனால் இந்திய அணியில் இருந்து தூரம் சென்றுள்ள இவர் தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Khaleel

4. கலீல் அஹமட்: ராஜஸ்தானை சேர்ந்த இவர் 2018 ஐபிஎல் சீசனில் 19 விக்கெட்டுகளை எடுத்ததால் இந்தியாவுக்காக 2018இல் ஆசிய கோப்பையில் அறிமுகமானார். இடதுகை பந்து வீச்சாளரான இவர் அறிமுகப் போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய நிலையில் அதற்கடுத்த போட்டிகளில் சுமாராக செயல்பட்டார்.

- Advertisement -

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் 8.83 என்ற எக்கனாமியில் பந்துவீசிய அவர் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். தற்போது நடராஜன், அர்ஷிதீப் சிங் போன்ற இடது கை பந்துவீச்சாளர்கள் வந்து விட்டதால் மீண்டும் இடம் பிடிப்பதற்கு இவர் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.

dube

3. ஷிவம் துபே: மும்பையைச் சேர்ந்த இவர் ஹர்திக் பாண்டியா வரிசையில் ஆல்-ரவுண்டராக வருவார் என்ற நோக்கத்தில் ஒருசில ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் 2019இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் அறிமுக போட்டியிலேயே 1 ரன்னில் அவுட்டான அவர் 13 போட்டிகளில் வெறும் 105 ரன்களை 17.5 என்ற சுமாரான சராசரியிலும் 10.05 என்ற மோசமான எக்கனாமியிலும் பந்து வீசினார்.

- Advertisement -

குறிப்பாக 2020இல் நியூசிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 34 ரன்களை வாரி வழங்கியதால் கழற்றிவிடப்பட்ட அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படவில்லை. எனவே இந்திய அணிக்கு மீண்டும் விளையாட வேண்டுமெனில் இவர் 2 – 3 வருடங்கள் உள்ளூர் அளவில் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது.

venkatesh

2. வெங்கடேஷ் ஐயர்: 2021 சீசனில் முதல் பகுதியில் திணறிய கொல்கத்தா துபாயில் நடந்த 2வது பகுதியில் அபாரமாக செயல்பட்டு பைனல் வரை முன்னேறுவதற்கு 10 போட்டிகளில் 370 ரன்களை வெளுத்து வாங்கிய இவர் அதன் காரணமாக இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த சமயத்தில் காயமடைந்த ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகி அனைவரையும் கவரும் வகையில் செயல்படவில்லை.

இருப்பினும் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் பினிஷராக அசத்திய அவர் அதன்பின் நடந்த ஐபிஎல் 2022 தொடரில் சுமாராக செயல்பட்டதால் அதன்பின் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா போன்றவர்கள் வந்து விட்டதால் மீண்டும் இந்திய அணிக்கு இவர் திரும்ப வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது.

Prithvi_Shaw

1. பிரிதிவி ஷா: 2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற கேப்டனான இவர் அதே வருடம் இந்தியாவுக்கு அறிமுகமாகி அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து 134 ரன்களை விளாசி அசத்தலான தொடக்கம் பெற்றார். அதனால் குட்டி சேவாக் என்று ரசிகர்கள் கொண்டாடத் துவங்கிய இவரை சச்சின், லாரா, சேவாக் ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டினார்.

அதனால் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த இவர் அதன்பின் நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வெறும் 102 ரன்களை 6 இன்னிங்ஸ்சில் எடுத்து சுமாராக செயல்பட்டார். அதனால் கழற்றிவிடப்பட்ட அவர் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு முயற்சித்து வருவதால் நிச்சயம் விரைவில் இந்திய அணிக்குள் திரும்புவார் என்று நம்பலாம்.

Advertisement