அவர் என் மாணவன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு – மகத்தான தோனியை பற்றி கங்குலி வியந்து பேசியது இதோ

Sourav Ganguly MS Dhoni
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி இந்தியா மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக போற்றப்படுகிறார். கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ராஞ்சியில் பிறந்து உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த 2004ஆம் ஆண்டு சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான அவர் அதிரடியாக விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற புதிய இலக்கணத்தை உருவாக்கிய அவர் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்களை செய்த கீப்பராக உலக சாதனை படைத்துள்ளார்.

Trophies Won By MS Dhoni

- Advertisement -

அப்படி விக்கெட் கீப்பங்கில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர் 2007ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத போதிலும் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்களை அற்புதமாக வழி நடத்தி முக்கிய தருணங்களில் தைரியமான முடிவுகளை எடுத்து வரலாற்றின் முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வென்று சரித்திரம் படைத்தார். மேலும் 2010இல் முதல் முறையாக தரவரிசையில் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேற்றிய அவர் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்று இந்திய ரசிகர்களின் 28 வருட கனவை நிஜமாக்கினார்.

பெருமையா இருக்கு:
அத்துடன் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரெய்னா உள்ளிட்ட இளம் வீரர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அவர் உலகிலேயே 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக வரலாறு படைத்தார். மேலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சீனியர் வீரர்களை கழற்றி விட்ட அவர் இன்றைய இந்திய அணியில் விளையாடும் 70% வீரர்களை அப்போதே வாய்ப்பு கொடுத்து வளர்த்து வளமான வருங்காலத்தை உருவாக்கி கொடுத்து 2019இல் ஓய்வு பெற்றார்.

Ganguly 1

ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் இப்போதும் நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தோனியை செல்ஃபிஷ் சென்று விமர்சிப்பதை சர்வ சாதாரணமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை அப்போது அவர் தைரியமாக சீனியர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களை உருவாக்காமல் போயிருந்தால் இன்று இந்தியாவும் இலங்கையை போல அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் திண்டாடியிருக்கும் என்பதை அவர்கள் யோசிப்பதே கிடையாது.

- Advertisement -

மொத்தத்தில் சில குறைகளும் தோல்விகளும் இருந்தாலும் கபில் தேவ், கங்குலி போன்ற மகத்தானவர்களை மிஞ்சிய தோனி இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டனாக என்றுமே போற்றுவதற்கு தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட்டின் மகத்தான வீரர் என்று பாராட்டியுள்ள முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அவரை தாம் வளர்த்தேன் என்பதை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். சமீபத்தில் தோனியை சந்தித்த பின் இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசியது பின்வருமாறு.

Ganguly-2

“தோனியை பற்றி பேசும் போது அனைத்தும் அவர் விளையாடிய போட்டிகளை பொறுத்தது கிடையாது. இந்திய கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை பொறுத்ததாகும். சில நாட்களுக்கு முன்பாக ஒரு விளம்பர படப்பிடிப்பின் போது அவரை நான் மும்பையில் சந்தித்தேன். அவர் மிகச்சிறந்த சாம்பியன். இந்திய கிரிக்கெட்டின் ஆல் டைம் கிரேட். அதுவும் ராஞ்சி போன்ற பெரிய அளவில் வீரர்களை உருவாக்காத ஊரிலிருந்து வந்து உலகக் கோப்பையை வென்ற மகத்தானவர்”

இதையும் படிங்க: IND vs AUS : ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித்துடன் துவக்க வீரராக யார் களமிறங்க வேண்டும்? – ஹர்பஜன் கருத்து

“அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் இந்திய கிரிக்கெட்டில் 2 வெற்றிகரமான கேப்டன்கள் (கபில் தேவ், தோனி) கிரிக்கெட் பிரபலமில்லாத ஊரிலிருந்து வந்தவர்கள் என்று நான் தொடர்ந்து சொல்ல மாட்டேன். ஏனெனில் அங்கிருந்து தான் தோனி வந்தார். அவர் “எங்கிருந்து வந்தாலும் என்னால் வெற்றி பெற முடியும்” என்ற நம்பிக்கையை அடுத்த தலைமுறை வீரர்களிடம் ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக இசான் கிசான் இரட்டை சதமடித்து எப்படி விளையாடுகிறார் என்பதை பாருங்கள்” என்று மனதார பாராட்டினார்.

Advertisement