IND vs AUS : ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித்துடன் துவக்க வீரராக யார் களமிறங்க வேண்டும்? – ஹர்பஜன் கருத்து

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ள வேளையில் இந்த டெஸ்ட் தொடரானது இந்திய அணிக்கும் மிக முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில் இந்திய அணி இந்த தொடரை (3-0) என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டும்.

IND-vs-AUS

- Advertisement -

அப்படி கைப்பற்றினால் மட்டுமே இரண்டாவது இடத்தை பிடித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். எனவே இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதே வேளையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதால் ஏகப்பட்ட மாற்றங்களுடன் அணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக யார் களமிறங்குவார்கள்? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எழுந்துள்ளது. ஏனெனில் வழக்கமாகவே கே.எல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தான் டெஸ்ட் போட்டிக்கான அணியில் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள்.

Shubman Gill

ஆனால் சமீபகாலமாக மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லும் இந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளதால் கே.எல் ராகுல் அல்லது சுப்மன் கில் ஆகிய இருவரில் யார் ரோகித்துடன் இறங்குவார்கள் என்ற கேள்வி அதிகளவில் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி அளிக்கும் விதமாக தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : தற்போதைய சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் கில் தான் துவக்க வீரராக களம் இறங்க வேண்டும். ஏனெனில் டெஸ்ட் போட்டிகளின் முடிவை தீர்மானிக்கும் முக்கிய இடமே துவக்க வீரர்கள் அமைக்கும் பார்ட்னர்ஷிப் தான். அந்த வகையில் தற்போது கில் நல்ல பார்மில் விளையாடிக் கொண்டு வருவதால் ரோகித்துடன் அவரை களம் இறக்கிவிட்டு விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : IND vs AUS : முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய விக்கெட் கீப்பர் யார்? – ரவி சாஸ்திரி அளித்த பதில் என்ன தெரியுமா?

கே.எல் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடலாம். ஏனெனில் சமீபத்தில் கில் இருக்கும் பார்மிற்கு அவர் நிச்சயம் இந்த தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். எனவே அவரே ரோகித் சர்மாவுடன் களமிறங்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement