IND vs AUS : முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய விக்கெட் கீப்பர் யார்? – ரவி சாஸ்திரி அளித்த பதில் என்ன தெரியுமா?

Shastri-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? என்பதே தற்போது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் ரிஷப் பண்ட் அண்மையில் விபத்தில் சிக்கி அணியில் இருந்து வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக கட்டாயம் ஒருவர் விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகித்தான் ஆக வேண்டும்.

Rishabh-Pant

- Advertisement -

அந்த வகையில் அந்த வாய்ப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணியுடன் பயணித்து வரும் கே.எஸ் பரத்திற்கு வழங்கப்படுமா? அல்லது இஷான் கிஷனுக்கு வழங்கப்படுமா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. அதே வேளையில் இத்தனை ஆண்டு காலம் இரண்டாவது விக்கெட் கீப்பராக இந்திய அணியுடன் பயணித்த கே.எஸ் பரத்திற்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் டெஸ்ட் பார்மெட்டில் மட்டுமே அவர் இந்திய அணியில் இடம் பெற்று வரும் வேளையில் அவருக்கான வாய்ப்பை வழங்குவதுதான் சரியான ஒன்று என்று என்பதே அனைவரும் கருத்தாகவும் உள்ளது. அதேவேளையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரெகுலராக இந்திய அணியில் இஷான் கிஷன் விளையாடி வருவதால் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

Bharat

இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார் விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இது ஒரு கடினமான முடிவு தான். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை எப்போதுமே ஒரு மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் தான் அணிக்கு தேவை. அதுவே என்னுடைய முதல் சாய்ஸ்.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா, அக்சர், குல்தீப் போன்ற நான்கு தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். அவர்களின் பந்தினை கணித்து சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்யும் திறனுடைய ஒருவர் இருந்தால்தான் டெஸ்ட் போட்டி சிறப்பாக இருக்கும். ஐந்து நாட்கள் நடைபெறும் இது போன்ற போட்டிகளில் தரமான விக்கெட் கீப்பர் தான் என்னுடைய தேர்வு என்று மறைமுகமாக கே.எஸ் பரத்தான் அவருடைய சாய்ஸ் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.

இதையும் படிங்க : 36 ஆல் அவுட் நியாபகம் இருக்கா? வாயை விட்டு மாட்டிய ஆஸ்திரேலியாவை வெச்சு செய்த இந்தியர்கள் – நடந்தது என்ன

இதேபோன்று ரசிகர்கள் பலரது கருத்தும், ஆதரவும் கே.எஸ் பரத்திற்கு தான் உள்ளது. ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் விக்கெட் கீப்பராகவும் மிகச் சிறந்த பணியை செய்துள்ளார். அதுமட்டும் இன்றி மூன்று ஆண்டுகளாக இந்திய அணியுடன் பயணித்து வரும் அவருக்கு இந்திய அணியின் சீருடையை பரிசாக வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement