வீட்ல இருந்து தான் யாரோ திருடி இருக்காங்க.. ப்ளீஸ் கண்டுபிடிச்சி குடுங்க – போலீசாரிடம் சவுரவ் கங்குலி புகார்

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ச்சியாக கிரிக்கெட் சம்பந்தமான பணிகளையே மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பி.சி.சி.ஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய அவர் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தொலைபேசி திருடு போனதாக அவர் போலீசில் அளித்துள்ள புகார் குறித்த தகவல் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

இது குறித்து வெளியான தகவலின் படி : சவுரவ் கங்குலி வீட்டில் இருந்த செல்போனை யாரோ திருடி விட்டார்கள் என்பதனால் அவர் தாகூர்புகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அதில் முக்கிய டேட்டாக்கள் இருப்பதினால் அந்த தொலைபேசி தனக்கு தேவை என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கங்குலி கூறியதாவது : என்னுடைய வீட்டில் இருந்து போன் திருடப்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் வீட்டில் அனைத்து இடங்களிலும் நான் தேடிப் பார்த்தும் என்னுடைய தொலைபேசியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் பலருடைய போன் நம்பரும் என்னுடைய தனிப்பட்ட டேட்டாவும் இருக்கின்றன.

- Advertisement -

அதேபோன்று பல அக்கவுண்ட்டுகள் அந்த ஃபோனில் தான் இருப்பதினால் அந்த போன் எனக்கு மிகவும் அவசியமான ஒன்று எனவே அதனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய மற்றொரு நட்சத்திர வீரர் – டீமுக்கு ஏற்பட்ட பின்னடைவு

இதனை அடுத்து சவுரவ் கங்குலியின் போனை தேடும் முயற்சியில் தற்போது காவல்துறையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீட்டில் இருந்தே தொலைபேசி திருபோன சம்பவம் அனைவரது மத்தியிலும் கவனிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement