இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய மற்றொரு நட்சத்திர வீரர் – டீமுக்கு ஏற்பட்ட பின்னடைவு

Leach
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1)என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் இந்த தொடரில் கடுமையான போட்டியை அளித்து வருவதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணியானது அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதல் போட்டிக்கு அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

இப்படி இரு அணிகளுமே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் சில வீரர்கள் இரண்டு அணிகளிலுமே காயம் காரணமாக வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியில் ஏற்கனவே சில நட்சத்திர வீரர்கள் வெளியேறியுள்ளனர்.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது இங்கிலாந்து அணி சார்பாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஜாக் லீச் எஞ்சியுள்ள தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அவர் பீல்டிங் செய்யும்போது முழங்காலில் காயமடைந்தார்.

இதையும் படிங்க : அண்டர்-19 2024 உ.கோ ஃபைனல் : அசத்திய ஆஸி.. 26 வருட சரித்திர இலக்கை சேசிங் செய்து சாதிக்குமா இந்திய அணி?

அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் விளையாடாத அவர் தற்போது எஞ்சியுள்ள தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக மாற்றுவீரர் யாரையும் இங்கிலாந்து அணி அழைக்கும் திட்டத்தில் இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement