அண்டர்-19 2024 உ.கோ ஃபைனல் : அசத்திய ஆஸி.. 26 வருட சரித்திர இலக்கை சேசிங் செய்து சாதிக்குமா இந்திய அணி?

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை 2024 தொடரின் மாபெரும் இறுதி போட்டி பிப்ரவரி பதினொன்றாம் தேதி துவங்கியது. பேனோனி நகரில் துவங்கிய அந்தப் போட்டியில் லீக் மற்றும் சூப்பர் 6 சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்று செமி ஃபைனலில் வெற்றி கண்ட நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு சாம் கோன்ஸ்டஸ் ஆரம்பத்திலேயே ராஜ் லிம்பானி வேகத்தில் டக் அவுட்டானார். இருப்பினும் அடுத்ததாக வந்த கேப்டன் ஹுக் வெயிப்ஜென் மற்றொரு துவக்க வீரர் ஹரி டிக்சனனுடன் சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

சாதனை இலக்கு:
அந்த வகையில் இரண்டாவது 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் ஹுக் வெயிப்ஜெனை 48 ரன்களில் அவுட்டாக்கிய நமன் திவாரி அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் சவாலை கொடுத்த ஹாரி டிக்சானையும் 42 ரன்களில் காலி செய்தார். அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ரியன் ஹிக்ஸ் 20 ரன்களில் அவுட்டானாலும் ஹரஸ் சிங் அரை சதமடித்து இந்திய பவுலர்களுக்கு சவாலை கொடுத்து 55 ரன்கள் குவித்தார்.

இறுதியில் ரஃக் மெக்மிலன் 2, சார்லி ஆண்டர்சன் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் ஓலிவர் பீகே கடைசிக்கட்ட ஓவர்களில் வேகமாக ரன்கள் குவித்து 46* (43) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 253/7 ரன்கள் எடுத்தது. சொல்லப்போனால் இதன் வாயிலாக அண்டர்-19 உலகக் கோப்பை வரலாற்றின் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையும் ஆஸ்திரேலியா படைத்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க: 218.18 ஸ்ட்ரைக் ரேட்டில் வெ.இ பவுலர்களை வெளுத்த மேக்ஸ்வெல்.. ரோஹித்துக்கு நிகராக சூர்யகுமாரை முந்தி உலக சாதனை

இதற்கு முன்பாக கடந்த 1998ஆம் ஆண்டு ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 242/3 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி 3 நமன் திவாரி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதை தொடர்ந்து அண்டர் 19 உலகக் கோப்பை வரலாற்றின் இறுதிப்போட்டியில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்தால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலைமையில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

அதனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தோல்விக்கு ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க சாதனை இலக்கை துரத்த வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் ஃபைனல் வந்துள்ள இந்தியா இந்த இலக்கையும் எட்டிப் பிடித்து வெல்வதற்கு போராடி வருகிறது.

Advertisement