சும்மா விமர்சிக்காதிங்க, ஐபிஎல் இல்லனா ஃபைனலில் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் தோல்வி கிடைச்சுருக்கும் – கங்குலி பதிலடி

Ganguly
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வரும் ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. குறிப்பாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் புஜாரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் கழற்றி விடப்பட்டு ருதுராஜ் கைக்வாட், ஜெய்ஸ்வால் ஆகிய இளம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூன் 7ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாத இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது.

TEam India Rohit Sharma

- Advertisement -

அந்த போட்டியில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்யாமல் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை கழற்றி விட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதை விட ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு முழுமையாக தயாராகாமல் களமிறங்கியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக நிறைய விமர்சனங்கள் எழுந்தன.

கங்குலி மறுப்பு:
ஏனெனில் ஐபிஎல் தொடரில் ஒரு நாளில் வெறும் 4 ஓவர்கள் வீசிய இந்திய பவுலர்கள் ஒரு வாரம் இடைவெளியில் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்துக்கு பயணித்து அங்குள்ள கால சூழ்நிலைகளுக்கு முழுமையாக தயாராகாமல் ஒரே நாளில் 17 ஓவர்கள் வரை சோர்வுடன் வீசி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் வாரி வழங்கியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் ஐபிஎல் தொடரை தடை செய்ய வேண்டும் என வழக்கம் போல ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் ஃபைனலில் இந்தியா தோற்க ஐபிஎல் எந்த விதத்திலும் காரணம் கிடையாது என முன்னாள் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இதே ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய நல்ல ஃபார்மில் இருந்த ரகானே மற்றும் ஜடேஜா ஆகியோர் தான் ஃபைனலில் முக்கிய ரன்களை எடுத்து குறைந்தபட்சம் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றியதை சுட்டிக்காட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த விமர்சனங்களை நான் ஏற்கவில்லை. ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ரகானே தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் அசத்தலாக விளையாடினார். எனவே இந்த கருத்துக்களை நான் நம்பவில்லை”

- Advertisement -

“சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த போன்ற சில வீரர்களும் (கேமரூன் கிரீன், டேவிட் வார்னர்) ஐபிஎல் தொடரில் விளையாடி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சிறப்பாக செயல்பட்டனர். மேலும் ஐபிஎல் முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவதற்கு தேவையான நேரம் இருந்தது. குறிப்பாக ஃபைனலை முடித்துக் கொண்டு இங்கிலாந்துக்கு சென்று விளையாடிய நிகழ்வுகள் இதற்கு முன் வரலாற்றில் நடந்துள்ளன. அத்துடன் டெஸ்ட், ஒருநாள் என வெவ்வேறு விதமான கிரிக்கெட்டில் விளையாடுவதால் சூழ்நிலைகள் விரைவாக மாறிவிடலாம்”

Sourav Ganguly

“எனவே ஐபிஎல் என்பது ஃபைனலில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்பதை நான் நம்பவில்லை. மாறாக ஐபிஎல் தொடரில் நீங்கள் விளையாடினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் உங்களுடைய டெக்னிக் மற்றும் பொறுமையை மாற்றி செயல்பட வேண்டும் என்பதையே நான் நம்புகிறேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த 10 வருடங்களில் பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் முக்கிய நேரங்களில் சொதப்புவதாலேயே ஐசிசி தொடரில் இந்தியா தோற்று வருகிறது.

இதையும் படிங்க:அவ்ளோ சீக்கிரம் வாழ விட்ருவோமா? யுவி, ராயுடு, ரெய்னா போன்ற வீரர்களின் வாழ்வில் கைவைக்கும் பிசிசிஐ – விவரம் இதோ

இருப்பினும் இந்தியாவின் தோல்விக்கான பழி ஒவ்வொரு முறையும் ஐபிஎல் மீது விழுந்து வருகிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement