நானும் இந்தியாவுக்காக விளையாடியவன் – தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி பதில்

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் அதிரடி கேப்டன் சவுரவ் கங்குலி கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2000ஆம் ஆண்டு சூதாட்டத்தில் சிக்கி தவித்த போது இந்திய கேப்டனாக பொறுப்பேற்ற சௌரவ் கங்குலி பல அதிரடியான மாற்றங்களை செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தரமான இந்திய அணியை உருவாக்கினார்.

Ganguly

- Advertisement -

கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டி வரை இந்திய அணியை வழிநடத்திச் சென்ற அவர் விரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், எம்எஸ் தோனி என பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை ஜாம்பவான்களை உருவாக்கினார்.

பிசிசிஐ தலைவராக:
மொத்தத்தில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மகத்தான கேப்டனாக கருதப்படும் சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கே தலைவர் ஆனதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள். அவரும் தலைவராக பொறுப்பேற்று கடந்த சில வருடங்களாக மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

BCCI

குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு வழிவகை செய்தார். மேலும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தும் வேலைகளையும் அவர் செய்து முடித்துள்ளார். இருப்பினும் இந்தியாவின் கேப்டனாக இருந்த விராட் கோலி விஷயத்தில் அவர் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். ஏனெனில் முதலில் பணிச்சுமை காரணமாக டி20 கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகிய விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவியை பிசிசிஐ வலுக்கட்டாயமாக பறித்தது.

- Advertisement -

அப்போது ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டது முற்றிலும் தேர்வு குழுவினரின் முடிவு என தெரிவித்த சவுரவ் கங்குலி “டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் கோலியிடம் கேட்டுக்கொண்டேன்” என தெரிவித்திருந்தார்.

Ganguly 1

சர்ச்சையில் கங்குலி:
இதை மறுத்த விராட் கோலி “டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என யாரும் தம்மை கேட்டுக்கொள்ளவில்லை” என பதிலளித்தார். பின்னர் விராட் கோலியின் அந்த பதில் பற்றி சவுரவ் கங்குலியிடம் கேட்டபோது “இது பற்றி கூறுவதற்கு கருத்து எதுவும் இல்லை,நேரம் வரும்போது பிசிசிஐ இதைப் பார்த்துக் கொள்ளும்” என கூறியிருந்தார். இதனால் விராட் கோலி மற்றும் சௌரவ் கங்குலி இடையே மோதல் ஏற்பட்டது உலகிற்கு அம்பலமானது.

- Advertisement -

அதை தொடர்ந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதற்கு பிசிசிஐ மற்றும் சௌரவ் கங்குலி தான் காரணம் என விராட் கோலியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தற்போதும் கூட தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்திய அணியை தேர்வு செய்வதில் சௌரவ் கங்குலி தலையிடுகிறார் என குற்றம் சாட்டிய சில ரசிகர்கள் அதற்கு ஆதாரமாக “சௌரவ் கங்குலி, ஜெய் ஷா, விராட் கோலி, ரோஹித் சர்மா” ஆகியோர் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்கள்.

Ganguly 1

மறுக்கும் கங்குலி:
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சவுரவ் கங்குலி அளித்துள்ள பதில் பின்வருமாறு. “இது போன்ற அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என எனக்குத் தோன்றவில்லை. பிசிசிஐ தலைவராக இருக்கும் நான் அந்தப் பதவியில் இருந்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். அதேபோல் சமூக வலைதளங்களில் வலம் வரும் அந்த புகைப்படத்தை நானும் பார்த்தேன். அந்த புகைப்படமானது இந்திய அணியை தேர்வு செய்யும் பொழுது எடுக்கப்பட்டதல்ல என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

- Advertisement -

ஜெய் ஷா செலக்சன் கமிட்டி மீட்டிங்கின் ஒரு பகுதியாக இல்லை. நானும் இந்தியாவுக்காக 424 போட்டிகளில் இந்தியவுக்காக விளையாடி உள்ளேன். அதை மக்களுக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்துவதில் ஒன்றும் தவறில்லையே” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 2017-ல் விராட் கோலிக்கும் அவருக்கும் இடையே பிளவு இருந்தது உண்மைதான் – டீம் மேனேஜர் ஓபன்டாக்

இந்தியவுக்காக நானும் ஏற்கனவே கேப்டனாக இருந்த அனுபவம் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள சவுரவ் கங்குலி இந்திய அணியில் தேர்வு செய்யும்போது பிசிசிஐ தலைவர் தலையிடுவது சரியானதாக இருக்காது என தமக்கும் தெரியும் என்று தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். அத்துடன் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement