உ.கோ விட ஐபிஎல் கோப்பை ஜெயிப்பது கஷ்டம், இன்னும் 6 மாசத்துல ரோஹித், டிராவிட் அந்த மேஜிக் பண்ணுவாங்க – கங்குலி உறுதி

Sourav Ganguly
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோற்றது. குறிப்பாக ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் அஸ்வின் போன்ற தரமான வீரர்களை தேர்வு செய்யாததும் ஆரம்பத்திலேயே கிடைத்த டாஸ் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்தாததும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதை விட ஜாம்பவான்களாக போற்றப்படும் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் மாபெரும் ஃபைனலில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

TEam India

- Advertisement -

முன்னதாக 2014ஆம் ஆண்டு ஐசிசி தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தமது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 முதல் 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக மாற்றிய விராட் கோலி, ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாடுகளில் வரலாறு காணாத வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் உலக கோப்பையை வென்று கொடுக்காததால் விமர்சனங்களை சந்தித்த அவர் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்து ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்வதாக அறிவித்தார்.

கங்குலி ஆதரவு:
இருப்பினும் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு 2 வெவ்வேறான கேப்டன்கள் தேவையில்லை என்று கருதிய அப்போதைய கங்குலி தலைமையிலான பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு அவருடைய ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் மனமுடைந்த விராட் கோலி வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்தும் மொத்தமாக கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். மறுபுறம் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் வென்றாலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோற்ற இந்தியா எந்த மாற்றத்தை முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை என்பதை நிரூபித்தது.

dravid

அத்துடன் கடந்த 2022 ஜனவரியிலேயே டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றாலும் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேச மண்ணில் காயத்தால் வெளியேறிய ரோகித் சர்மா முதல் முறையாக இப்போட்டியில் வெளிநாட்டு மண்ணில் மோசமாக கேப்டன்ஷிப் செய்து தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் அவரும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் பதவி விலக வேண்டும் என ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். இந்நிலையில் உலக கோப்பையை விட கடினமான ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவும் அனுபவமிக்க ராகுல் டிராவிட்டும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுப்பார்கள் என்று நம்புவதாக சௌரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி சென்றதும் கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த தேர்வுக்குழுவுக்கு ரோகித் சர்மா சிறந்த தேர்வாக இருந்தார். ஏனெனில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள அவர் சர்வதேச அளவிலும் ஆசிய கோப்பையை வென்றுள்ளதால் அந்த பதவிக்கு தகுதியானவராக இருந்தார். மேலும் கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் அவர் விளையாடியிருந்தார்”

Ganguly

“அத்துடன் கடந்த டி20 உலக கோப்பையில் அவரது தலைமையில் இந்தியா அரையிறுதிக்கு சென்றது. எனவே தேர்வு குழுவினர் சரியான வேலைக்கு சரியானவரை தேர்ந்தெடுத்தனர். நான் ரோகித் சர்மாவை முழுமையாக நம்புகிறேன். அவரும் எம்எஸ் தோனியும் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளனர். பொதுவாக மிகவும் கடினமான ஐபிஎல் கோப்பை வெல்வது எளிதல்ல. குறிப்பாக உலகக் கோப்பையை விட ஐபிஎல் கோப்பை வெல்வது மிகவும் கடினமாகும். ஏனெனில் ஐபிஎல் தொடரில் நீங்கள் 14 போட்டிகளில் போராடி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும்”

இதையும் படிங்க:ஐ.பி.எல் இல்லனா என்ன? புதிய தொடரில் விளையாட இருக்கும் சின்ன தல ரெய்னா – எந்த தொடரில் தெரியுமா?

“ஆனால் உலக கோப்பையில் 4 – 5 போட்டிகளிலேயே அரையிறுதிக்கு வந்து விடலாம். ஐபிஎல் தொடரில் சாம்பியனாக 17 போட்டிகளை கடக்க வேண்டும். எனவே இந்த உலகக்கோப்பை வரை அவர்கள் தொடர வேண்டும். இந்த உலகக் கோப்பையில் எப்படி விளையாட வேண்டும் என்று ரோகித் சர்மா மனதில் இருப்பது எனக்கு தெரியாது. இருப்பினும் அவருக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் இந்திய அணிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என கூறினார்.

Advertisement