ஐ.பி.எல் இல்லனா என்ன? புதிய தொடரில் விளையாட இருக்கும் சின்ன தல ரெய்னா – எந்த தொடரில் தெரியுமா?

Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 226 ஒருநாள் போட்டிகள், 18 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். அதோடு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2021வது ஆண்டு வரை 205 ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐ.பி.எல் தொடரிலும் அவர் ஒரு மிகச்சிறந்த மேட்ச் வின்னராக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

raina

- Advertisement -

சென்னை அணியின் வெற்றிகளுக்கு தோனி எவ்வாறு ஒரு காரணமோ அதேபோன்று மற்றொரு மிக முக்கிய காரணமாக இருந்த சுரேஷ் ரெய்னாவிற்கு ரசிகர்கள் மத்தியில் சின்ன தல என்கிற செல்லப்பெயரும் உண்டு.

ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவரை சென்னை அணி வெளியேற்றிய போது அனைவருமே சிஎஸ்கே வின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்தனர். அதோடு சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் இருந்தும் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடாத அவர் இலங்கையில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாட இருக்கிறார்.

Raina

இந்த லங்கா பிரீமியர் லீக் ஏலமானது வரும் ஜூன் 14-ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ள வேளையில் அவர் தனது பெயரை அதிகாரவபூர்வமாக அந்த ஏலத்திற்கு பதிவு செய்துள்ளார். ஜூலை 31-ம் தேதி துவங்க இருக்கும் இந்த தொடரில் விளையாட சுரேஷ் ரெய்னா நிச்சயம் ஏதாவது ஒரு அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5500 ரன்களை குவித்து அட்டகாசமான வீரராக இருப்பதால் நிச்சயம் அவர் இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கில் ஏதாவது ஒரு அணிக்காக தேர்வு செய்யப்பட்டு விளையாடுவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலியை தூக்கிட்டு ரோஹித்தை டெஸ்ட் கேப்டனாக நியமித்தது ஏன்? பின்னணியை பகிர்ந்து சௌரவ் கங்குலி

இந்திய வீரர் மற்ற நாடுகளில் உள்ள லீக் போட்டிகளில் விளையாட வேண்டுமெனில் பி.சி.சி.ஐ விதிப்படி அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்க வேண்டும். அதன்படி சுரேஷ் ரெய்னா ஏற்கனவே அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றதால் இலங்கை பிரீமியர் லீக்கில் விளையாட அவருக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement