வங்கதேசத்தை அடிச்சா போதாது, இங்க சதமடிச்சு சாதனையின் தரத்தை நிரூப்பிங்க – நட்சத்திர இந்திய வீரருக்கு கங்குலி அட்வைஸ்

Ganguly
- Advertisement -

உலகின் டாப் 2 அணிகளான இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பை 99% உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா கடைசியாக நடைபெற்ற 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களில் வரலாற்றில் முதல் முறையாக தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்கும் லட்சியத்துடன் களமிறங்குகிறது.

pujarashot

- Advertisement -

மேலும் 2 அணிகளிலும் ஸ்டீவ் ஸ்மித் முதல் விராட் கோலி வரை முழுக்க முழுக்க உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பதால் இத்தொடருக்கான எதிர்பார்ப்பு உலக அளவில் எகிறியுள்ளது. முன்னதாக கடந்த 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைப்பதற்கு செடேஸ்வர் புஜாரா முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்றே சொல்லலாம். குறிப்பாக 2018/19இல் உலகத்தரம் வாய்ந்த ஆஸ்திரேலிய பவுலர்களை அவர்களது சொந்த மண்ணில் தெறிக்க விட்ட அவர் 521 ரன்களை 74.43 என்ற அற்புதமான சராசரியில் குவித்து தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

சாதனையின் தரம்:
இருப்பினும் 2020/21 தொடரில் பார்மை இழந்து தடுமாறிய அவர் பெரிய ரன்களை குவிக்கவில்லை என்றாலும் சிட்னி, காபா மைதானங்களில் நடைபெற்ற முக்கிய போட்டிகளில் அதிக பந்துகளை நங்கூரமாக எதிர்கொண்டு பாறையைப் போல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளில் உடம்பில் அடி வாங்கி விக்கெட்டுகளை விடாமல் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியதை ரசிகர்களால் மறக்க முடியாது. ஆனால் அதன் பின்பும் சதமடிக்க முடியாமல் தடுமாறிய அவரை கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வுக்குழு அதிரடியாக நீக்கியது.

pujara 2

போதாகுறைக்கு ரஞ்சிக்கோப்பையில் தடுமாறிய அவரை ஐபிஎல் தொடரிலும் சென்னை நிர்வாகம் கழற்றி விட்டது. ஆனால் அதுவே நல்ல நேரத்தை உருவாக்கியதைப் போல் அதன் காரணமாக இங்கிலாந்துக்கு சென்று கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசக்ஸ் அணிக்காக சதங்களையும் இரட்டை சதங்களையும் விளாசி பார்முக்கு திரும்பிய அவர் கடந்த ஜூலையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

அதில் அரை சதமடித்த அவர் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 வருடங்கள் கழித்து ஒரு வழியாக சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இந்நிலையில் 98 போட்டிகளில் விளையாடி 7014 ரன்களை குவித்து நவீன டெஸ்ட் கிரிக்கெட்டின் ஸ்பெஷலிஸ்ட் வீரராக போற்றப்படும் புஜாரா தனது 100வது போட்டியை வரும் பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் 2வது போட்டியில் விளையாடுகிறார்.

Ganguly

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடும் 13வது இந்திய வீரர் என்ற சாதனை படைக்க காத்திருக்கும் அவர் வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தை விட தரமான பந்து வீச்சை கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் சதமடித்து தன்னுடைய தரத்தை நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: 7 விக்கெட்கள் சரிந்த போது சதமடித்து காப்பாற்றிய ஜிம்பாப்வே வீரர் – டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிதான உலக சாதனை சமன்

“அவர் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியை டெல்லியில் விளையாடுவது மிகப்பெரிய சாதனையாகும். அதன் வாயிலாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டியில் விளையாடிய 13வது இந்தியர் என்ற சாதனையும் படைப்பார். அதற்கு அவர் தகுதியானவர். ஆனால் இந்த தொடரில் அவர் தன்னுடைய தரத்திற்கேற்றார் போல் செயல்பட வேண்டும். ஏனெனில் கடந்த 3 வருடங்களில் தரமான பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக அவர் இன்னும் சதமடிக்கவில்லை. எனவே அவருக்கு அப்படி ஒரு சதம் தற்போது தேவைப்படுகிறது. அதனால் இது அவருக்கு மிகப்பெரிய தொடராக அமையும்” என்று கூறினார்.

Advertisement