IND vs AUS : இந்தியாவுல தான் இந்த கொடும நடக்குது, எங்களை குழப்ப இப்படி பண்றிங்களா? மார்க் வாக் கோபம் – காரணம் என்ன

Mark-Waugh
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அந்த அணி 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்து அபார வெற்றி பெற்ற தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொண்டு ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கும் தகுதி பெற்றது. அதனால் நிம்மதியடைந்துள்ள அந்த அணி மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த டிராவிஸ் ஹெட் 32 ரன்களில் அவுட்டாக மார்னஸ் லபுஸ்ஷேன் 3, ஸ்டீவ் ஸ்மித் 38, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 17 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி இந்தியா பதிலடி கொடுத்தது. ஆனாலும் மறுபுறம் சிம்ம சொப்பனமாக மாறிய மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மிகச்சிறப்பாக பேட்டிங் செய்து சதமடித்து 15 பவுண்டரியுடன் 104* ரன்கள் குவித்துள்ளார். அவருடன் கேமரூன் கிரீன் 49* ரன்கள் எடுத்ததால் முதல் நாள் முடிவில் 255/4 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா இப்போட்டியில் நல்ல தொடக்கம் பெற்றுள்ளது.

- Advertisement -

கேட்க யாரும்மில்லையா:
மறுபுறம் பிளாட்டான பிட்ச்சில் பந்து வீச்சில் போராடி வரும் இந்தியா எப்படியாவது இந்த போட்டியில் வென்று 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடி வருகிறது. முன்னதாக இத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இந்தியா வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் சரமாரியாக விமர்சித்தனர். அந்த நிலையில் இந்த போட்டிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பிலிருந்தே ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு பிட்ச்கள் தயாரிக்கப்பட்டு வந்தது.

அத்துடன் நேற்று மாலை வரை அந்த 2 பிட்ச்களில் எது முதன்மையான போட்டியில் பயன்படுத்தப்படும் என்பதை அகமதாபாத் மைதான பராமரிப்பாளர்கள் தெரிவிக்கவில்லை. மாறாக போட்டி நாளன்று காலை தான் எந்த பிட்ச் தான் பயன்படுத்தப்படும் என்பதை மைதான பராமரிப்பாளர்கள் அறிவித்தனர். இந்நிலையில் பொதுவாக ஒரு போட்டிக்கு ஒரு பிட்ச் மட்டுமே தயாரிக்கப்படும் நிலையில் இந்த போட்டியில் தங்களை வேண்டுமென்றே குழப்புவற்காக 2 பிட்ச்களை இந்தியா தயாரித்து அதில் எது முதன்மையான போட்டியில் பயன்படுத்தப்படும் என்பதை சொல்லாமல் இழுக்கடித்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவில் இத்தொடரில் ஆரம்பம் முதலே பிட்ச் பற்றிய விஷயங்களில் இது போல தங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அரங்கேறி வருவதாக தெரிவிக்கும் அவர் இதைக் கேட்க யாரும் இல்லையா என்ற வகையில் பாக்ஸ் கிரிக்கெட் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக நீங்கள் எந்த பிட்ச்சில் விளையாடப் போகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியவில்ல”

“பொதுவாக ஆஸ்திரேலியாவில் சைட் ஸ்க்ரீன், கேமரா ஆகியவற்றை சரியான கோணத்தில் செட்டப் செய்வதற்காக எந்த பிட்ச்சை பயன்படுத்தப் போகிறோம் என்பதை மைதான பராமரிப்பாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தெரிவித்து விடுவார்கள். ஆனால் இந்தியாவில் அது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. இங்கே என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. இந்த விஷயத்தில் யாராவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : இந்திய மண்ணில் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாவது நபராக அசத்தலான சாதனையை படைத்த – உஸ்மான் கவாஜா

முன்னதாக சுழலுக்கு சாதகமான பிட்ச் இருப்பதாக விமர்சித்த ஆஸ்திரேலியர்கள் தற்போது அவர்கள் விரும்பும் வகையில் ஃபிளாட்டான பிட்ச் இருந்தும் அகமதாபாத் மைதானத்தை மீண்டும் இப்படி விமர்சிப்பது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் எத்தனை பிட்ச் உருவாக்க வேண்டும் எதை பயன்படுத்த வேண்டும் அதை எப்போது வெளியிட வேண்டும் என்ற அனைத்தையும் கட்டுப்படுத்தும் உரிமை மைதான பராமரிப்பாளர்களுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement