இந்த வெற்றிக்கு காரணமே நீங்க தான் ஆனால் – சூப்பர் ஓவரில் வென்ற பின் ரசிகர்களுக்கு மந்தனா வைத்த மனமுருகும் கோரிக்கை

Smirit Mandhana
- Advertisement -

2023ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா தனது சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொள்கிறது. நவி மும்பையில் நடைபெற்று வரும் இத்தொடரின் முதல் போட்டியில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா டிசம்பர் 12ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 187/1 ரன்கள் குவித்து மிரட்டியது. அதிகபட்சமாக 2வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பெத் மூனி 82* (54) ரன்களும் தஹிலா மெக்ராத் 70* (51) ரன்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஸ்மிருதி மந்தனாவுடன் அதிரடியான 76 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஷபாலி வர்மா 34 (23) ரன்களில் அவுட்டான போது வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் 4 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 21 (22) ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டான அடுத்த ஓவரிலேயே மறுபுறம் வெளுத்து வாங்கிய ஸ்மிருதி மந்தனா 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 79 (49) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

ரசிகர்களுக்கு கோரிக்கை:

அதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் ரிச்சா கோஸ் 3 சிக்ஸருடன் 26* (13) ரன்களும் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரியை அடித்த தேவிகா வைத்யா 11* (5) ரன்களும் எடுத்தனர். அதனால் 20 ஓவர்களில் இந்தியாவும் 187/5 ரன்கள் எடுத்ததால் சமனில் முடிந்த போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க நடைபெற்ற சூப்பர் ஓவரில் ரிச்சா கோஸ் 6 ரன்களும் மந்தனா 4, 6, 3 என 13* (3) ரன்களும் விளாசியதால் இந்தியா 20/1 ரன்கள் எடுத்தது.

அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு ரேணுகா சிங் வீசிய கடைசி ஓவரில் 4, 4, 6 என அலிஷா ஹீலி 15* (4) ரன்கள் எடுத்தார். இருப்பினும் இதர வீராங்கனைகள் அதிரடி காட்ட தவறியதால் ஆஸ்திரேலியா 16/1 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் திரில் வெற்றி பெற்று 1 – 18 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஸ்மிருத்தி மந்தனா ஆட்டநாயகி விருதை வென்றார். சமீப காலங்களாகவே அவர் அடித்தால் தான் இந்தியா வெற்றி பெறும் நிலைமை இருக்கிறது. அதை விட ஒருமுறை கூட உலக கோப்பையை வெல்லாத காரணத்தால் மகளிர் அணிக்கு இந்திய ரசிகர்கள் பெரும்பாலும் ஆதரவு கொடுப்பதே கிடையாது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் கூட நேரில் சென்று முழுமையான ஆதரவு கொடுப்பதில்லை. ஆனால் ஆடவர் அணி மட்டும் வங்கதேசத்திடம் தோற்றால் கூட அடுத்த போட்டியிலேயே மைதானத்தை நிரப்பும் அளவுக்கு இந்திய ரசிகர்கள் ஒருதலைபட்சமான ஆதரவு கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதை உடைப்பதற்காக இத்தொடரின் முதல் போட்டியில் ரசிகர்களுக்கு பிசிசிஐ இலவச அனுமதி கொடுத்த காரணத்தால் 2வது போட்டியில் எதிர்பார்த்ததை விட 47,000 ரசிகர்கள் போட்டி நடைபெற்ற டிஒய் பாட்டில் மைதானத்திற்கு வந்து ஆதரவு கொடுத்தார்கள்.

இந்நிலையில் இப்போட்டியில் நடப்பு சாம்பியனை சூப்பர் ஓவரில் தோற்கடிக்க ரசிகர்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம் என்று தெரிவிக்கும் ஸ்மிருதி மந்தனா இதே ஆதரவை தொடர்ந்து கொடுத்தால் தான் தங்களால் தொடர்ந்து வெற்றி பெற முடியும் என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே வந்த அனைவருக்கும் நன்றி. இது அற்புதமான சூழலாகும். இப்போட்டியில் எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவரையும் நாங்கள் விரும்புகிறோம். நம்ப முடியாத இப்போட்டியில் நாங்கள் வெல்வோம் என்று எதிர்பார்க்கவில்லை”

இதையும் படிங்க: PAK vs ENG : டெஸ்டில் டி20யை மிஞ்சிய த்ரில்லர் – பரபரப்பான போட்டியில் 22 வருட சரித்திர தொடரை வென்றது யார்? முழு விவரம் இதோ

“ஆனால் அது ரசிகர்களால் மட்டுமே சாத்தியமானது. எனவே ப்ளீஸ் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் நாங்கள் உங்களை பெருமையாடைய செய்வோம். மும்பையில் கடந்த 2018/19க்குப்பின் நீண்ட நாட்கள் கழித்து அதுவும் எங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு முன்னிலையில் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. நான் எப்போதும் இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே விளையாடுகிறேன். இந்த வெற்றியால் அனைவரும் சிரித்த முகத்துடன் வீடு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement