நீங்க பண்ண வரைக்கும் போதும் இலங்கை அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட குட்டி மலிங்கா – என்ன காரணம்?

Pathirana
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்தியா, நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்து வலுவான நிலையில் உள்ளன. அதே வேளையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற முன்னணி அணிகள் சற்று சரிவை சந்தித்து புள்ளி பட்டியலில் பின்தங்கி உள்ளன.

அதிலும் குறிப்பாக இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளானது தாங்கள் விளையாடிய 2 போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் எட்டாவது மற்றும் பத்தாவது இடத்தில் உள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முக்கியமான 14-வது லீக் போட்டியானது இன்று அக்டோபர் 16-ஆம் தேதி லக்னோ மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முன்னேற வாய்ப்புள்ளதால் எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த தொடரில் இதுவரை இலங்கை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 102 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 300-க்கும் ரன்களை குவித்தும் அந்த அணி தோல்வியை சந்தித்தது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய ஆஸ்திரேலேயே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி ஒரு அதிரடி முடிவை கையில் எடுத்து குட்டி மலிங்காவான மதீஷா பதிரானாவை வெளியேற்றி உள்ளது. அவருக்கு பதிலாக அனுபவ வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரா இடம் பிடித்துள்ளார். அதற்கு காரணம் யாதெனில் : இளம் வீரரான அவர் (பதிரானா)ஓவருக்கு 7 ரன்கள் மேல் விட்டுக் கொடுப்பது மட்டுமின்றி உதிரிகளை அதிகமாக வீசுகிறார்.

இதையும் படிங்க : என்ன தான் சொல்லுங்க.. அதுல சச்சினை விட விராட் கோலி தான் பெஸ்ட்.. கவாஜா பாராட்டு

அதோடு அவரது வித்தியாசமான ஆக்சன் காரணமாகவும் வேகம் காரணமாகவும் ரன்கள் எளிதாக கசிகின்றன. டி20 கிரிக்கெட் பொருத்தவரை விக்கெட் டேக்கராக இருக்கும் அவர் ஒருநாள் போட்டிகளில் அனுபவமற்ற வீரராகவும், உதிரிகளை அதிகம் வழங்குவதாலும் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அனுபவ வீரரான லஹிரு குமாரா இன்றைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement