பும்ரா மட்டும் விளையாடலானா இந்தியாவின் அந்த கனவு பலிக்காது – இலங்கை வீரர் அதிரடி கருத்து

Bumrah
- Advertisement -

இந்திய அணியானது சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வி இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறவுள்ள வேளையில் இந்திய அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Zampa

- Advertisement -

அதேபோன்று இந்திய அணியில் பல முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் உலகக் கோப்பை அணியை எவ்வாறு கட்டமைக்கப்போகிறார்கள் என்ற கேள்வியும் அனைவரது மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாட வில்லை என்றால் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் 50 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றாது என இலங்கை வீரர் பெர்னாண்டோ அதிரடியான ஒரு கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Bumrah

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியின் வெற்றியை எடுத்து பார்த்தால் அதில் பும்ராவின் பங்களிப்பு அதிகம் என்பது உங்களுக்கு புரியும். எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு சாதகமாக மாற்றும் திறனுடைய அவர் எத்தனையோ போட்டிகளில் இந்திய அணியின் முதுகெலும்பாய் இருந்துள்ளார்.

- Advertisement -

தற்பொழுது அவருக்கு என்ன காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை, ஒருவேளை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பும்ரா விளையாட வேண்டும். அப்படி அவர் விளையாடவில்லை என்றால் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு குறைவுதான்.

இதையும் படிங்க : WPL 2023 : கடைசி ஓவர் டஃப் கொடுத்த டெல்லி, மலர்ந்த ஹர்மன்ப்ரீத் – மகளிர் தொடரிலும் மும்பை வரலாறு படைத்தது எப்படி

ரோகித் சர்மாவும் பும்ராவும் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலை வைத்திருக்கின்றனர். ரோகித் அணிக்கு தேவைப்படும் சரியான நேரத்தில் சரியாக பும்ராவை பயன்படுத்தி வருகிறார். பும்ரா இல்லை என்றால் நிச்சயம் இந்திய அணி உலக கோப்பை கைப்பற்ற வாய்ப்பே இல்லை என பெர்னாண்டோ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்திய அணிக்காக 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 121 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement