WPL 2023 : கடைசி ஓவர் டஃப் கொடுத்த டெல்லி, மலர்ந்த ஹர்மன்ப்ரீத் – மகளிர் தொடரிலும் மும்பை வரலாறு படைத்தது எப்படி

WPL MI Harmanpreet Kaur
- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் வகையில் வரலாற்றின் முதல் பெரிய மகளிர் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று துவங்கியது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான நட்சத்திர தரமான வீராங்கனைகள் களமிறங்கிய இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு 5 அணிகள் மோதின. அதில் லீக் சுற்றில் ஸ்ம்ரிதி மந்தனா தலைமையிலான பெங்களூரு மற்றும் குஜராத் ஆகிய அணிகள் 2 வெற்றிகள் 6 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்து ஆரம்பத்திலேயே வெளியேறின.

மறுபுறம் ஆஸ்திரேலியாவுக்கு 4 டி20 உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த மெக் லென்னிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் 8 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்து நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மேலும் அதே 6 வெற்றிகளை பதிவு செய்த ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான மும்பை 4 வெற்றிகளை பதிவு செய்து 3வது இடத்தை பிடித்த உத்திரபிரதேசத்தை எலிமினேட்டர் போட்டியில் எதிர்கொண்டு தோற்கடித்தது.

- Advertisement -

வரலாறு படைத்த மும்பை:
அதைத்தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி மார்ச் 26 ஆம் தேதியன்று மும்பையில் இருக்கும் ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஷபாலி வர்மா 11 (4) ரன்கள் விளாசி அவுட்டான நிலையில் அடுத்து வந்த கேப்ஸி 0, ஜெனிமா ரோட்ரிகஸ் 9, மரிசன் கேப் 18 (21) என முக்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

போதாக்குறைக்கு மறுபுறம் போராடிய கேப்டன் மெக் லென்னிங் 5 பவுண்டரியுடன் 35 (29) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார். அதனால் 75/6 என்ற ஸ்கோருடன் தடுமாறிய அந்த அணியை கடைசி நேரத்தில் சீக்கா பாண்டே 3 பவுண்டரி 1 சிக்சருடன் 27* (17) ரன்களும் ராதா யாதவ் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 27* (12) ரன்களும் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்து ஓரளவு காப்பாற்றினர்.

- Advertisement -

இருப்பினும் 20 ஓவரில் டெல்லி போராடி 131/9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக ஹெய்லே மேத்யூஸ் மற்றும் இஸி ஓங் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து 132 என்று சுலபமான இலக்கை துரத்திய மும்பைக்கு ஹெய்லே மேத்தியூஸ் 13 (12) யாஷ்க்கா பாட்டியா 4 (3) என தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 23/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹெர்மன்ப்ரீத் கௌர் பொறுப்புடன் செயல்பட்டு 5 பவுண்டரியுடன் 37 (39) ரன்கள் குவித்து காப்பாற்றிய போது முக்கிய நேரத்தில் ரன் அவுட்டானார். அதன் காரணமாக போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி அவருடன் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட நட் ஸ்கீவர் 7 பவுண்டரியுடன் 60* (55) ரன்களும் எமிலியா கெர் 14* (8) ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

அதனால் 19.3 ஓவரில் 134/3 ரன்கள் எடுத்த மும்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஆனால் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்ற டெல்லி பேட்டிங்கில் தேவையான ரன்களை எடுக்க தவறியதால் பந்து வீச்சில் போராடியும் வெற்றி காண முடியவில்லை.

குறிப்பாக ஆடவர் தொடரில் முதல் கோப்பையை வெல்லாமல் இருந்து வரும் அந்த அணி மகளிர் தொடரில் சாதிக்கும் என்று எதிர்பார்த்த டெல்லி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் 2022 காமன்வெல்த் முதல் 2023 டி20 உலக கோப்பை வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் மெக் லென்னிங்கிடம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் முதல் முறையாக அவரை சாய்த்து புன்னகை மலர சிரித்த முகத்துடன் ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: நான் முதல்முறை தோனியை பாக்கும்போது நடந்தது என்ன தெரியுமா? அவர் வேறலெவல் – ரெய்னா பகிர்ந்த சுவாரசியம்

அத்துடன் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று ஆடவர் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை தற்போது மகளிர் தொடரின் முதல் கோப்பையை வென்றது அந்த அணி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement