நான் முதல்முறை தோனியை பாக்கும்போது நடந்தது என்ன தெரியுமா? அவர் வேறலெவல் – ரெய்னா பகிர்ந்த சுவாரசியம்

Dhoni and Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான தோனியும், சுரேஷ் ரெய்னாவும் எவ்வளவு சிறந்த நண்பர்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமான காலத்திலிருந்து இணைந்து விளையாடிய தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக இரு தூண்களாக செயல்பட்டனர். தமிழக ரசிகர்கள் மத்தியில் தோனிக்கு தல என்ற பெயரும், சுரேஷ் ரெய்னாவிற்கு சின்ன தல என்கிற பெயரும் உள்ளது. அந்த அளவிற்கு நட்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்த தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த போதும் ஒரே நாளில் அறிவித்திருந்தனர்.

Raina

அந்த அளவிற்கு தங்களது நட்பின் மதிப்பை உயர்த்தி வைத்திருக்கும் அவர்கள் இருவரும் சிறந்த கிரிக்கெட் வீரர்களாகவே இன்றளவும் வளம் வருகின்றனர். இந்நிலையில் தோனியை தான் எப்போது முதல் முறையாக சந்தித்தேன் என்பது குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் :

- Advertisement -

கடந்த 2004-ஆம் ஆண்டு கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகளுக்கு இடையேயான உள்நாட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போதுதான் ஜார்கண்ட்டில் இருந்து நீண்ட முடியை வைத்திருக்கும் ஒரு வீரர் அதிரடியாக விளையாடுகிறார் என்கிற செய்தி எங்களுக்கு கிடைத்தது. அப்படி விளையாடும் அந்த வீரர் யார் என்று நாங்கள் சென்று ஹோட்டலில் பார்த்தபோதுதான் தோனியை முதல் முறையாக சந்தித்தேன்.

Raina-5

அப்போது நீண்ட முடிவை வைத்துக்கொண்டு ஒரு வீரர் ஓரத்தில் அமர்ந்து பட்டர் சிக்கன், ரொட்டியையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதனை கண்ட எங்களது அணியை சேர்ந்த ஒரு வீரர் இவரால் பெரிய ஸ்கோரெல்லாம் அடிக்க முடியாது இவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

- Advertisement -

ஆனால் போட்டி நடைபெற்ற நாளன்று யார் தோனியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொன்னாரோ அவருடைய பந்து வீச்சிலேயே தோனி பொளந்து கட்டினார். அன்றைய போட்டியில் அவர் ஆடிய விதம் எங்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. போட்டி முடிந்ததுமே நான் தெரியாமல் பேசிவிட்டேன் என்று அந்த வீரரும் என்னிடம் சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொண்டார்.

இதையும் படிங்க : SA vs WI : 2005 போல வெறித்தனமான சேசிங், வெ.இ’ஸை முரட்டுத்தனமாக திருப்பி அடித்த தெ.ஆ – இரட்டை உலக சாதனை வெற்றி

அந்த அளவிற்கு தோனி அந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். அதனை தொடர்ந்து நாங்கள் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ச்சியாக நீண்ட தூரம் பயணித்துள்ளோம் என்று சுரேஷ் ரெய்னா சுவாரஸ்யமான சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement