SA vs WI : 2005 போல வெறித்தனமான சேசிங், வெ.இ’ஸை முரட்டுத்தனமாக திருப்பி அடித்த தெ.ஆ – இரட்டை உலக சாதனை வெற்றி

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி மார்ச் 26ஆம் தேதியன்று செஞ்சூரியனில் நடைபெற்றது. அதில் டார்க் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 20 ஓவரில் 258/5 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் உலக சாதனை படைத்தது.

அந்த அணிக்கு ப்ரெண்ட் கிங் 1 ரன்னில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு அடித்து நொறுக்கி 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜான்சன் சார்லஸ் வெறும் 39 பந்துகளில் சதமடித்து டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். மொத்தம் 10 பவுண்டரி 11 சிக்சர்களுடன் 118 (46) ரன்கள் விளாசி அவுட்டான அவருடன் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய கெயில் மேயர்ஸ் 5 பவுண்டரின் 4 சிக்சருடன் 51 (27) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இறுதியில் கேப்டன் ரோவ்மன் போவல் 28 (19) ரோமாரியா செபார்டு 41* (18) ஓடின் ஸ்மித் 11* (5) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 3 விக்கெட்களை சாய்த்தார். அதை தொடர்ந்து 259 என்ற கடினமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் நாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்பது போல் பந்து வீச்சில் வாங்கிய அத்தனை அடியையும் பேட்டிங்கில் பதிலடியாக முரட்டு அடி கொடுத்தது என்றே சொல்லலாம்.

குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் குயிட்டன் டீ காக் – ரீசா ஹென்றிக்ஸ் ஆகியோர் வெறித்தனமாக பேட்டிங் செய்து 6 ஓவரிலேயே 102/0 ரன்கள் குவித்து மிரட்டல் தொடக்கம் கொடுத்தனர். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களில் 100+ ரன்கள் குவித்த முதல் அணி (முழு அந்தஸ்து பெற்ற அணிகளில்) என்ற உலக சாதனையும் தென்னாப்பிரிக்கா படைத்தது. அதே வேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெறித்தனமாக அடித்து நொறுக்கிய அந்த ஜோடி 10.5 ஓவரிலேயே 152 ரன்கள் ஓப்பனிங் பார்ன்ஷிப் அமைத்து அபார தொடக்கம் கொடுத்த போது 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்த குயின்டன் டீ காக் 100 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அடுத்து வந்த ரீலி ரோசவ் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 16 (4) ரன்களும் மறுபுறம் வெளுத்து வாங்கிய ரீசா ஹென்றிக்ஸ் 11 பவுண்டர் 2 சிக்சருடன் 68 (28) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். அந்த நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 10 (10) ரன்களில் அவுட்டானாலும் அற்புதமான தொடக்கம் கிடைத்ததை பயன்படுத்திய கேப்டன் ஐடன் மார்க்கம் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 38* (21) ரன்களும் ஹென்ட்ரிச் கிளாசன் 16* (7) ரன்களும் விளாசி மெகா பினிஷிங் கொடுத்தனர்.

அதனால் 18.5 ஓவரிலேயே 259/4 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் வித்யாசத்தில் வென்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 250+ ரன்களுக்கும் மேல் வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணியாக உலக சாதனை படைத்தது. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக வெறித்தனமான சேசிங் செய்த அணியாகவும் உலக சாதனை படைத்தது. அந்த பட்டியல்:
1. 259/4 – தென் ஆப்பிரிக்கா : வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, செஞ்சூரியன், 2023*
2. 246/4 – பல்கேரியா : செர்பியாவுக்கு எதிராக, சோபியா, 2022
3. 245/5 – ஆஸ்திரேலியா : நியூசிலாந்துக்கு எதிராக, ஆக்கிலாந்து, 2018

இதையும் படிங்க: SA vs WI : 2005 போல வெறித்தனமான சேசிங், வெ.இ’ஸை முரட்டுத்தனமாக திருப்பி அடித்த தெ.ஆ – இரட்டை உலக சாதனை வெற்றி

முன்னதாக கடந்த 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 434 ரன்களை வெறித்தனமாக சேசிங் செய்து ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா தற்போது அதே போல வெஸ்ட் இண்டீஸ் எதிராக முரட்டுத்தனமாக சேசிங் செய்து டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement