ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இவர் விளையாட மாட்டார். போட்டிக்கு முன்பே – கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

IND-vs-SL
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது நாளை கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி துவங்கிய இந்த ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 17-ஆம் தேதி நிறைவடை உள்ளது. இந்த இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போவது எந்த அணி என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாளைய இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப் போட்டியின் போது இலங்கை அணி சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்ஷனா விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தின் போது தொடை பகுதியில் காயமடைந்த தீக்ஷனா தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் அவ்வப்போது மைதானத்தில் இருந்து வெளியே சென்று முதல் உதவியும் பெற்று வந்தார். இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் வலது தொடையில் காயம் அடைந்துள்ளது தெரியவந்தது.

அதோடு இந்த காயம் தற்போது பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாளை நடைபெற இருக்கும் இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மகேஷ் தீக்ஷனா இடம்பெற மாட்டார் என்ற தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

அதோடு இந்த போட்டிக்கு முன்னதாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டாலும் அவருக்கு பதிலாக இறுதிப்போட்டியில் யார் களமிறங்குவார்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை. அதன்படி இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி : மகேஷ் தீக்ஷனா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்ததன் காரணமாக இறுதிப்போட்டியில் அவர் விளையாட மாட்டார். ஸ்கேன் செய்யும் போது அவருக்கு தசையில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் இதன் காரணமாக நாங்கள் மாற்று வீரரை அணிக்குள் கொண்டு வந்துள்ளோம் என்றும் உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க : விமர்சன பயம்.. சாதனைக்காக ஆடுனா எப்டி ஜெய்ப்பீங்க.. இந்தியாவின் ஐசிசி தோல்வி காரணத்தை உடைத்த – நாசர் ஹுசைன், சைமன் டௌல்

அடுத்த மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ள வேளையில் தொடர்ச்சியாக பல்வேறு அணிகளை சேர்ந்த வீரர்கள் காயம் அடைந்து வருவது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement