விமர்சன பயம்.. சாதனைக்காக ஆடுனா எப்டி ஜெய்ப்பீங்க.. இந்தியாவின் ஐசிசி தோல்வி காரணத்தை உடைத்த – நாசர் ஹுசைன், சைமன் டௌல்

Nasser Hussain Simon Doull
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை அகமதாபாத், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.

சொல்லப்போனால் கடைசியாக கடந்த 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை தோனி தலைமையில் வென்ற இந்தியா அதன் பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி சொந்த மண்ணில் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. முன்னதாக சாதாரண இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை தெறிக்க விடும் இந்தியா முக்கியமான ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஏதோ ஒரு வகையில் சொதப்பி 10 வருடங்களாக வெறும் கையுடன் வெளியேறி வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது.

- Advertisement -

விமர்சன பயம்:
இந்நிலையில் இந்திய வீரர்கள் சாதனைகளுக்காகவும் விமர்சனங்களுக்கு பயந்து விளையாடுவதாலேயே உலக கோப்பையை வெல்ல முடிவதில்லை என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் விமர்சித்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அவர்கள் சாதனைகளை பின்பற்றிய கிரிக்கெட்டை அதிக விளையாடுகின்றனர். அவர்கள் சாதனைக்காக அதிகமாக அக்கறை கொடுக்கிறார்கள்”

“அதுவே அவர்களுடைய பேட்டிங்கில் இருக்கும் கவலைக்குரிய அம்சம் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர்களிடம் திறமையான உலகத்தரம் வாய்ந்திருக்கின்றனர். ஆனாலும் பெரிய தொடரின் முக்கிய நேரத்தில் பயமற்ற கிரிக்கெட்டை விளையாடுவதே அவர்களுக்கு கடந்த சில உலகக் கோப்பையில் தலைகுனிவை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் தங்களுடைய இடத்தைப் பற்றி செய்தித்தாள்களில் என்ன அச்சடிக்கப்படும் என்பதை நினைத்து பயப்படுவதால் ரிஸ்க் எடுத்து விளையாடுவதில்லை” என்று கூறினார்.

- Advertisement -

அதே நிகழ்ச்சியில் நாசர் ஹுசைன் பேசியது பின்வருமாறு. “நாக் அவுட் போட்டிகளில் அவர்கள் பயமற்ற கிரிக்கெட்டின் கிரிக்கெட்டின் எல்லைக்கு சற்று குறைவாகவே விளையாடுகின்றனர். எனவே செமி ஃபைனல் போன்ற அழுத்தமான போட்டிகளில் அவர்கள் மற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அவர்களுடைய அணியில் விராட் ரோஹித் போன்ற 2 மகத்தான வீரர்கள் இருக்கின்றனர். அதில் ரோகித் சர்மா 3 இரட்டை சதங்கள் அடித்துள்ள நிலையில் விராட் கோலி கடினமான சூழ்நிலையில் சேசிங் செய்யக்கூடிய திறமை கொண்டிருக்கிறார்”

இதையும் படிங்க: IND vs SL : நாங்க திட்டத்துடன் ரெடி.. அதை செஞ்சா மேட்ச் எங்க கைக்கு வந்துரும்.. இந்தியாவுக்கு எதிரான – ஃபைனல் பற்றி சனாகா சவால் பேட்டி

“மேலும் கில் போன்ற வீரர்களுடன் பும்ரா வந்துள்ளது போனஸாகும்” என்று கூறினார். அவர்கள் கூறுவது போல 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் உட்பட நல்ல திறமை இருந்தும் பயமற்ற கிரிக்கெட்டை இந்தியா விளையாடத் தவறுவது தோல்விகளை கொடுத்து வருகிறது. எனவே அது சொந்த மண்ணிலாவது மாறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement