IND vs SL : நாங்க திட்டத்துடன் ரெடி.. அதை செஞ்சா மேட்ச் எங்க கைக்கு வந்துரும்.. இந்தியாவுக்கு எதிரான – ஃபைனல் பற்றி சனாகா சவால் பேட்டி

Dasun Shanaka
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்ற நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் முன்னாள் சாம்பியன் இந்தியா மோதும் மாபெரும் இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு கொழும்பு நகரில் நடைபெற உள்ளது. அதில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஆசிய அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 6 கோப்பைகளை வென்று நடப்பு சாம்பியனாக ஜொலிக்கும் இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இவ்விரு அணிகளை பொறுத்த வரை தரவரிசையிலும் சரி தரத்திலும் சரி இலங்கையை விட இந்தியா சற்று வலுவான அணியாக பார்க்கப்படுவதால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் கடந்த சில வருடங்களாகவே இளம் வீரர்களால் சொல்லி அடிக்கும் இலங்கை கடந்த ஆசிய கோப்பையில் கத்துக்குட்டியாக கருதப்பட்ட போது சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை தோற்கடித்து ஃபைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

இந்தியாவை எதிர்கொள்ள ரெடி:
எனவே இம்முறையும் குஷால் மெண்டிஸ், வெல்லாலகே, பதிரனா போன்ற வீரர்களுடன் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் இந்தியாவுக்கு சவாலை கொடுத்து 7வது கோப்பையை வெல்வதற்கு இலங்கை தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் சவாலை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக இலங்கை கேப்டன் தசுன் சனாகா கூறியுள்ளார்.

குறிப்பாக ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுத்தால் இந்தியாவை தோற்கடித்த கோப்பையை வெல்ல முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும் அது பிட்ச் எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்து அமையும் என தெரிவிக்கும் அவர் இது பற்றி ஃபைனலுக்கு முன் நிகழ்த்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக நாங்கள் அதற்கு தயாராக உள்ளோம். இருப்பினும் அதே மொத்தமாக பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து அமையும்”

- Advertisement -

“ஏனெனில் இந்த தொடரில் பிட்ச் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. எனவே நாங்களும் அதற்கு தகுந்தாற்போல் அணியை தேர்வு செய்துள்ளோம். இந்தியா போன்ற அணிக்கு எதிராக நீங்கள் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுப்பது போட்டியை உங்களது பக்கம் திறந்து விடும். மேலும் நாங்கள் சரியான நேரத்தில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறோம். எங்களுடைய வீரர்கள் நாட்டுக்காக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர்”

இதையும் படிங்க: 50 ஓவர் உலகக்கோப்பையை தவறவிட இருக்கும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் – பெரிய லாஸ் தான்

“இளம் வீரர்கள் உடைய திறமையை நிரூபிக்க விரும்புகின்றனர். மேலும் 2 வருடங்களில் 2 ஃபைனல்களில் விளையாடுவது மிகவும் ஸ்பெஷலாகும். அதில் நிறைய போட்டிகள் நெருக்கமாக செல்வதால் ஏன் எங்களுக்கு இதயத்தை நிறுத்தும் தருணங்களை கொடுக்கிறீர்கள் என்று ரசிகர்கள் மெசேஜ் செய்கின்றனர்” என்று கூறினார். அதை சமாளிக்க விராட் கோலி, பும்ரா போன்ற முதன்மை வீரர்களுடன் இந்திய அணியும் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement