50 ஓவர் உலகக்கோப்பையை தவறவிட இருக்கும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் – பெரிய லாஸ் தான்

Naseem-Shah
- Advertisement -

இந்தியாவில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக தற்போது ஆசிய கண்டத்தை சேர்ந்த ஆறு அணிகள் பங்கேற்று நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை செப்டம்பர் 17-ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோத இருக்கின்றன.

எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக மிக முக்கியமான தொடராக பார்க்கப்பட்ட இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட ஆறு அணிகளும் தங்களது உலக கோப்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர்களையே வைத்து இந்த தொடரில் விளையாடினர்.

- Advertisement -

ஏனெனில் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்த தொடரானது வீரர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமையும் என்பதால் இந்த தொடரில் முன்னணி வீரர்களுடன் அனைத்து அணிகளும் பங்கேற்று விளையாடினர். ஆனால் இந்த ஆசிய கோப்பை தொடரின் போது பல்வேறு அணிகளை சேர்ந்த பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி இருப்பது உலகக்கோப்பை தொடருக்கான அணியிலும் அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அந்த வகையில் 20 வயதான பாகிஸ்தான் அணியை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் போது காயமடைந்தார். போட்டியின் 46வது ஓவரின் போது காயமடைந்த அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார். பின்னர் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும்போது கூட அவர் களத்திற்கு பேட்டிங் செய்ய வரவில்லை.

- Advertisement -

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் விளையாடவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பின்னர் தற்போது நசீம் ஷா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் துபாய் சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த காயம் குணமடைய இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதனால் உலகக்கோப்பை தொடரை அவர் தவறவிடவும் வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : வங்கதேசத்துக்கு எதிரா அந்த தப்பு கணக்கு போட்டதை ஒத்துக்குறேன்.. ஆனா ஃபைனலில் மிஸ் ஆகாது – சுப்மன் கில் பேட்டி

மேலும் இன்னும் சில தினங்களில் அவருக்கு மற்றும் ஒரு ஸ்கேன் செய்யப்படும் என்றும் அதன் பின்னரே உறுதியான அறிக்கை வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை நசீம் ஷா உலக கோப்பை தொடரை தவறவிட்டால் அவருக்கு பதிலாக ஜமான் கான் அணியில் சேர்க்கப்படுவார் என்றும் தெரிகிறது. 20 வயதான நசீம் ஷா மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை ஸ்விங் செய்யக்கூடியவர் என்பதனால் அவர் உலகக்கோப்பை தொடரை தவறிவிடும் பட்சத்தில் அது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய இழப்பாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement