வங்கதேசத்துக்கு எதிரா அந்த தப்பு கணக்கு போட்டதை ஒத்துக்குறேன்.. ஆனா ஃபைனலில் மிஸ் ஆகாது – சுப்மன் கில் பேட்டி

Shubam Gill 121
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 8வது கோப்பையை வென்று 2023 ஐசிசி உலகக் கோப்பையில் ஆசிய களமிறங்கும் முனைப்புடன் விளையாடி வரும் போது சர்மா தலைமையிலான இந்தியா லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இருப்பினும் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற கடைசி சூப்பர் 4 போட்டியில் 262 ரன்களை துரத்தும் போது 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

குறிப்பாக ரோகித் சர்மா 0, திலக் வர்மா 5, இசான் கிசான் 5, சூரியகுமார் யாதவ் 26, ரவீந்திர ஜடேஜா 7 என நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கை கொடுக்காத நிலையில் சுப்மன் கில் சதமடித்து 121 ரன்களும் அக்சர் படேல் 41 ரன்கள் எடுத்தும் இந்தியா கடைசி ஓவரில் வெற்றியை நழுவ விட்டது. அதனால் கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசத்திற்கு எதிராக 11 வருடங்கள் கழித்து ஆசிய கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தப்பு கணக்கு போட்டுட்டேன்:
அதனால் ஃபைனலுக்கு முன் இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் கவலையளிப்பதாகவும் இருக்கிறது என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த போட்டியில் 121 ரன்கள் அடித்து நன்கு செட்டிலாகியும் 43 ஓவரிலேயே அவுட்டாகி தப்பு கணக்கு போட்டு விட்டதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

அதாவது மீதமிருந்த 7 ஓவர்கள் நின்று விளையாடியிருந்தால் இந்தியாவை வெற்றி பெற வைத்திருக்க முடியும் என்று தெரிவிக்கும் அவர் இலங்கைக்கு எதிரான ஃபைனலில் அந்த தவறை சரி செய்து கொண்டு விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஃபைனலுக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் நீங்கள் பேட்டிங் செய்யும் போது நல்ல வாய்ப்பு இருந்தும் தப்பு கணக்கு போடுவீர்கள். அந்த வகையில் அது என்னுடைய தவறான கணிப்பாகும்”

- Advertisement -

“அதாவது நான் அவுட்டான போது போட்டியில் இன்னும் நிறைய நேரம் இருந்தது. அது போன்ற சமயத்தில் நான் ஆக்ரோஷமாக விளையாடாமல் சற்று மெதுவாக விளையாடியிருந்தால் வெற்றிக்கான எல்லையை எங்களால் தாண்டியிருக்க முடியும். இருப்பினும் இவை அனைத்தும் எனக்கு பாடமாகும். நல்லவேளையாக இது ஃபைனல் போட்டியாக அமையவில்லை” என்று கூறினார். அத்துடன் விராட் கோலி, பும்ரா போன்ற முதன்மை வீரர்கள் ஓய்வெடுத்த நிலையில் சந்தித்த இந்த தோல்வியால் இந்தியாவை குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: விராட் கோலியை விட பாபர் அசாம் இந்த ஸ்டேஜ்ல டாப் ஆஹ்தான் இருக்காரு – மேத்யூ ஹைடன் கருத்து

இதை தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் மாபெரும் ஃபைனலில் 6 கோப்பைகளை வென்று நடப்பு சாம்பியனாக திகழும் இலங்கையை 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஆசிய அணியாக திகழும் இந்தியா தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு மழை அச்சுறுத்தல் கொடுப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement