விராட் கோலியை விட பாபர் அசாம் இந்த ஸ்டேஜ்ல டாப் ஆஹ்தான் இருக்காரு – மேத்யூ ஹைடன் கருத்து

Matthew-Hayden
- Advertisement -

சமீப காலமாகவே பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியுடன் அதிகளவு ஒப்பிட்டு பேசப்பட்டு வரும் கிரிக்கெட் வீரராக இருந்து வருகிறார். ஏனெனில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி ஜாம்பவானாக திகழ்ந்து வரும் வேளையில் தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பாபர் அசாம் மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதால் அவர் அவ்வப்போது விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டு வருகிறார்.

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 270-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 13,000 ரன்களை கடந்து வெற்றிகரமான வீரராக வலம் வருகிறார். அதோடு சச்சினின் பல சாதனைகளை முறியடித்து வரும் விராட் கோலி வெகுவிரைவில் இன்னும் பல சாதனைகளை படைக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

அதே வேளையில் 107 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 19 சதங்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்கள், 5000 ரன்கள் அடித்த வீரராக விராட் கோலியை கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இருந்தாலும் விராட் கோலியை போன்று பல ஆண்டுகள் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவாரா? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. இந்நிலையில் பாபர் அசாம் விராட் கோலியை விட சற்று முன்னிலையில் தான் உள்ளார் என்று பாகிஸ்தானியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான மேத்யூ ஹைடன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : பாபர் அசாம் ஒரு சாம்பியன் பிளேயர். அவருக்கு சில சறுக்கல் ஏற்பட்டாலும் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வர வேண்டும் என்பது தெரியும். சாம்பியன் பிளேயர்களுக்கு சரிவில் இருந்து மீண்டும் பார்மை எப்படி மீட்டெடுப்பது என்பது நன்றாக தெரியும். என்னை பொறுத்தவரை பாபர் அசாமின் கரியரின் இந்த ஸ்டேஜில் விராட் கோலியுடன் அவரை ஒப்பிட்டால் :

இதையும் படிங்க : க்ளாஸென் – மில்லர் ஜோடி புதிய சரவெடி சாதனை.. இந்தியாவின் மாபெரும் சாதனையை தூளாக்கிய தெ.ஆ புதிய உலக சாதனை

பாபர் அசாம் புள்ளி விவரங்களின் அடிப்படையில் விராட் கோலியை விட சற்று முன்னிலையில் உள்ளதாகவே நினைக்கிறேன். நிச்சயம் பாபர் அசாமிடம் உள்ள திறமைக்கு அவர் இனியும் சர்வதேச கிரிக்கெட்டில் மிளிர வாய்ப்புள்ளது. அதோடு தொடர்ச்சியாக அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மேலும் பல சாதனைகளையும் அவர் படைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக மேத்யூ ஹைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement