க்ளாஸென் – மில்லர் ஜோடி புதிய சரவெடி சாதனை.. இந்தியாவின் மாபெரும் சாதனையை தூளாக்கிய தெ.ஆ புதிய உலக சாதனை

Klassen Miller
- Advertisement -

இந்தியாவின் நடைபெற உள்ள 2023 ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா முதலிரண்டு போட்டிகளில் தோற்றாலும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று தொடரை 2 – 2* என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அதிலும் செப்டம்பர் 15ஆம் தேதி செஞ்சூரியனில் நடைபெற்ற முக்கியமான 4வது போட்டியில் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய அந்த அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்று அசத்தியது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா ஹென்றிச் க்ளாஸென் 174 (83), டேவிட் மில்லர் 82* (45), வேன் டெர் டுஷன் 62 (65) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் 416/5 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மட்டும் அதிரடியாக போராடி 99 (77) ரன்கள் எடுத்த போதிலும் டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்ஷேன் போன்ற முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

புதிய உலக சாதனை:
அதனால் 34.5 ஓவரிலேயே 252 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டி வென்ற தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 4 விக்கெட்களை சாய்த்தார். முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 25 ஓவர்களில் 120/3 ரன்கள் எடுத்து தடுமாற்றமாகவே செயல்பட்டது. ஆனால் 34.4வது ஓவரில் ஜோடி சேர்ந்த க்ளாஸென் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தென்னாப்பிரிக்கா பவுலர்களுக்கு கருணை காட்டாமல் சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள்.

அதனால் கடைசி 25 ஓவரில் மட்டுமே தென்னாபிரிக்கா 222 ரன்கள் குவித்தது. அந்த வகையில் 5வது விக்கெட்டுக்கு 222 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்த ஹென்றிச் க்ளாஸென் – டேவிட் மில்லர் ஜோடி வெறும் 92 பந்துகளில் 200 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிவேகமாக 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சரபடியான உலக சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.

- Advertisement -

இதற்கு முன் 2019ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் – இயன் மோர்கன் 122 பந்துகளில் 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனையாகும். அவர்களது அதிரடியால் கடைசி 10 ஓவர்களில் 173 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட்டில் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற இங்கிலாந்தின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தது.

இதையும் படிங்க: இறுதிப்போட்டிக்கு முன்னதாக மேலும் ஒரு வீரருக்கு ஏற்பட்டுள்ள காயம் – பைனலில் விளையாடுவது சந்தேகம்?

இதற்கு முன் 2022ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டம் நகரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 164 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதை விட இப்போட்டியில் 416 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த அணி என்ற இந்தியாவின் சாதனை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் இந்தியா 6 முறை 400+ ரன்கள் அடித்து 2வது இடத்தில் இருக்கும் நிலையில் இங்கிலாந்து 5 முறை 400+ ரன்கள் அடித்து 3வது இடத்தில் இருக்கிறது.

Advertisement