இறுதிப்போட்டிக்கு முன்னதாக மேலும் ஒரு வீரருக்கு ஏற்பட்டுள்ள காயம் – பைனலில் விளையாடுவது சந்தேகம்?

IND-vs-SL
- Advertisement -

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி துவங்கிய 16-வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக மேலும் ஒரு இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்ஷனா காயமடைந்து இருக்கிறார் என்றும் அதன்காரணமாக நாளைய இறுதிப்போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை அணியில் வனிந்து ஹசரங்கா, லஹிரு குமாரா, துஷ்மந்தா சமீரா என முக்கிய வீரர்கள் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாட முடியாத சூழலில் அதனை தொடர்ந்து தற்போது மகேஷ் தீக்ஷ்னாவும் நாளைய இறுதிப்போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் இலங்கை அணிக்கு இது ஒரு வருத்தமான செய்தியாக மாறியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியிலும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஆசியக்கோப்பை தொடரில் இடம்பெற்றும் காயம் காரணமாக விளையாட முடியாமல் தவித்து வருகிறார். அதேபோன்று அச்சர் பட்டேலும் கடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்ததால் அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : இத்தோட முடிச்சுக்குவோம்.. என்னை விட அவர் தான் வரலாற்றின் மகத்தான ஃபினிஷர் – ஓப்பனாக பாராட்டிய ஏபிடி

இப்படி அடுத்தடுத்து வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவது உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இரண்டு அணிகளுக்குமே சற்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விடயமாக கூட மாறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement