இத்தோட முடிச்சுக்குவோம்.. என்னை விட அவர் தான் வரலாற்றின் மகத்தான ஃபினிஷர் – ஓப்பனாக பாராட்டிய ஏபிடி

AB De Villiers
- Advertisement -

சர்வதேச அளவிலும் சரி ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் தொடர்களிலும் சரி டாப் ஆர்டரை விட அழுத்தமான மிடில் ஆர்டரில் விளையாடுவது பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதில் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்தால் நங்கூரமாக நின்று நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி எதிரணிக்கு வளைந்து கொடுக்காமல் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பவர்களை ஃபினிஷர் என்று ரசிகர்களும் வல்லுனர்களும் அழைப்பார்கள்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் மைக்கேல் பெவன் ஃபினிசிங் கலையை அறிமுகப்படுத்தியவராக அறியப்படுகிறார். அதை பெரும்பாலான போட்டிகளில் பயன்படுத்தி 6, 7 போன்ற லோயர் மிடில் ஆர்டரில் அழுத்தமான சூழ்நிலைகளில் களமிறங்கி கடைசி பந்து வரை போட்டியை எடுத்து செல்லும் ஸ்டைலை கொண்ட எம்எஸ் தோனி எதிரணி பவுலர்களைப் பந்தாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மகத்தான ஃபினிஷராக போற்றப்படுகிறார்.

- Advertisement -

ஏபிடி பாராட்டு:
குறிப்பாக 2011 உலகக்கோப்பை ஃபைனலில் சிக்சர் விளாசி மறக்க முடியாத வெற்றி பெற்று கொடுத்த அவர் ஃபினிஷிங் கலையை உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்தியவராக அறியப்படுகிறார். அவரை போலவே 360 டிகிரிகளும் எதிரணி பவுலர்களைப் பந்தாடிய தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் முன்னாள் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் நிறைய போட்டிகளில் சீக்கிரமாக செயல்பட்டு சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார்.

அதனால் தோனி மற்றும் ஏபிடி ஆகியோரில் சிறந்த பினிஷர் யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் ஒரு பக்கம் இருந்ததை கொண்டே இருக்கிறது. இந்நிலையில் எம்எஸ் தோனி தான் சிறந்த ஃபினிஷர் என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நம்முடைய யூடியூப் பக்கத்தில் ஏபி டீ வில்லியர்ஸ் பதிலளித்து பேசியது பின்வருமாறு. “நிச்சயமாக அது எம்எஸ் தோனி என்று நான் சொல்வேன். நான் அவர் விளையாடுவதை எப்போதுமே விரும்பி பார்ப்பேன். ஏனெனில் வரலாற்றில் அவர் அது போன்ற சூழ்நிலையில் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்”

- Advertisement -

“குறிப்பாக 2011 உலகக்கோப்பை பைனலில் நேராக சிக்சர் அடித்து அவர் பெற்றுக் கொடுத்த வெற்றி என்னுடைய மனதில் எப்போதும் நீங்காமல் இருக்கும். அதே போல அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பலமுறை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். இங்கே நான் மற்றும் அவரில் யார் சிறந்த ஃபினிஷர் என்ற விவாதம் இருந்து வருகிறதல்லவா? அதில் எம்எஸ் சிறந்த ஃபினிஷர் என்று நான் சொல்வேன்”

“அந்தப் பாராட்டு பெறவேண்டியவருக்கு கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் சென்னை அணிக்கும் இந்தியாவுக்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால் குழந்தைகள் மற்றும் இளம் வீரர்களுக்கு அவர் ரோல் மாடலாகவும் இருக்கிறார். எனவே எம்எஸ் போல செட்டிலான பின் நேராக விளையாட விளையாட முயற்சிகள்” என்று பெருந்தன்மையுடன் பாராட்டினார்.

Advertisement