நடப்பு சாம்பியன்னா சும்மாவா, இலங்கை அசத்தல் வெற்றி – ஆசிய கோப்பையிலிருந்து வங்கதேசம் வெளியேறியதா?

SL vs BAN
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிகெட் தொடரில் செப்டம்பர் 9ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3:00 மணிக்கு இலங்கையில் இருக்கும் கொழும்புவில் நடைபெற்ற 2வது சூப்பர் 4 போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு திமுக கருணரத்னே ஆரம்பத்திலேயே 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த நிலைமையில் வந்த குசால் மெண்டீசுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மற்றொரு தொடக்க வீரர் நிசாங்கா போராடி 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவர்களிலேயே மறுபடியும் தன்னுடைய பங்கிற்கு அசத்திய குசால் மெண்டிஸ் 50 (73) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்ததாக வந்த அசலங்கா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் 4வது இடத்தில் களமிறங்கிய சமர விக்ரமா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்த நிலையில் எதிர்ப்புறம் தனஞ்செயா டீ சில்வா 6, கேப்டன் சனாகா 24 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

இலங்கை அசத்தல் வெற்றி:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சமர விக்கிரமா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் போராடி 93 (72) ரன்களில் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அதனால் 50 ஓவர்களில் இலங்கை 257/9 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டஸ்கின் அகமது மற்றும் ஹசன் முகமத் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 258 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த மெஹந்தி ஹசன் 28, முகமத் நைம் 21 என துவக்க வீரர்கள் கேப்டன் சனாகாவின் வேகத்தில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதைவிட மிடில் ஆர்டரில் லிட்டன் தாஸ் 15, கேப்டன் சாகிப் அல் ஹசன் 3, முஸ்பிகர் ரஹீம் 29 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் கடைசியில் தவ்ஹீத் கிரீடாய் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 7 பவுண்டரி 1 சிக்சருடன் 82 (97) ரன்கள் எடுத்து போராடியும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அந்தளவுக்கு பந்து வீச்சில் ஆரம்பம் முதலே நேர்த்தியாக செயல்பட்டு 21 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றுக் கொடுத்த இலங்கைக்கு அதிகபட்சமாக கேப்டன் தசுன் சனாக்கா, மஹீஸ் தீக்சனா, மதிசா பதிரனா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் காரணமாக சூப்பர் 4 சுற்றில் தங்களுடைய முதல் வெற்றியை அதுவும் சொந்த மண்ணில் பதிவு செய்த இலங்கை தங்களை நடப்பு சாம்பியன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இதையும் படிங்க: அவங்க துணையா இருக்கப்ப இந்தியா இல்ல யாருமே எங்கள தொட முடியாது, சண்டே சந்திப்போம் – முகமத் ரிஸ்வான் ஓப்பன்டாக்

ஆனால் ஏற்கனவே சூப்பர் 4 சுற்றில் தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பெரிய தோல்வியை சந்தித்த வங்கதேசம் இப்போட்டியிலும் தோற்றுள்ளதால் ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான 90% வாய்ப்பை இழந்துள்ளது. அதனால் இந்தியாவுக்கு எதிரான தன்னுடைய கடைசி சூப்பர் 4 போட்டியில் வென்றாலும் அந்த அணி இத்தொடரிலிருந்து ஏமாற்றத்துடன் லீக் சுற்றுடன் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement