அவங்க துணையா இருக்கப்ப இந்தியா இல்ல யாருமே எங்கள தொட முடியாது, சண்டே சந்திப்போம் – முகமத் ரிஸ்வான் ஓப்பன்டாக்

Moahmmed Rizwan press
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான சூப்பர் 4 போட்டி நடைபெறுகிறது. அதில் வென்று ஃபைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்துவதற்கு போராட உள்ள இரு அணிகளுக்கு மத்தியில் இந்தியாவை விட பாகிஸ்தான் பந்து வீச்சு துறையில் வலுவான அணியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நசீம் ஷா ஆகிய 3 பவுலர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை 140க்கும் மேற்பட்ட கி.மீ வேகத்தில் தெறிக்க விடும் அளவுக்கு திறமையுடன் பந்து வீசுகின்றனர்.

குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்து ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை ஒரே போட்டியில் அவுட் செய்த முதல் பவுலர் என்ற சாதனை படைக்கும் அளவுக்கு அதிரடியான திறமை வாய்ந்தவராக இருக்கிறார். அவர்களது வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இத்தொடரின் லீக் சுற்றில் 66/4 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற இந்தியா 150 ரன்களை கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் போராடி 266 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

யாரும் தொட முடியாது:
அதனால் பாகிஸ்தான் பவுலர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் அவ்வளவு எளிதில் தொட முடியாது என்று அந்நாட்டு ரசிகர்களிடம் முன்னாள் வீரர்களும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இந்நிலையில் இன்று ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருப்பதற்கு தங்களுடைய மகத்தான 3 பவுலர்கள் தான் காரணம் என்று பாகிஸ்தான் நட்சத்திர வீரர் முகமது ரிஷ்வான் கூறியுள்ளார்.

எனவே அவர்கள் இருக்கும் வரை இந்தியா மட்டுமின்றி உலகின் எந்த பேட்ஸ்மேன்களும் எவ்வளவு சுலபமாக பாகிஸ்தானை அடிக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இந்திய பவுர்களை தேவையான திட்டங்களை வகுத்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்”

- Advertisement -

“குறிப்பாக அனைவரும் பேசும் எங்களின் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமல்லாமல் உலகின் அனைத்து அணிகளுக்கும் மிகப்பெரிய சவாலையும் கடினத்தையும் கொடுத்து வருகின்றனர். அவர்கள் எங்களுக்கு கிடைத்த பரிசாகும். அதே சமயம் எங்களுடைய பெஞ்சில் இருக்கும் வீரர்களும் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதாலேயே நாங்கள் டாப் இடத்திற்கு முன்னேறியுள்ளோம். மேலும் இந்திய பேட்ஸ்மேன்கள் எங்களுடைய பவுலர்களை அதிகம் எதிர்கொண்டதில்லை”

இதையும் படிங்க: கொழும்புவை தனது கோட்டையாக வைத்திருக்கும் கிங் கோலி, அப்டினா பாகிஸ்தானுக்கு சம்பவம் இருக்கு – 2 மாஸ் புள்ளிவிவரம் இதோ

“அதனால் முதல் போட்டியில் தடுமாறிய அவர்கள் சுமார் 70 ரன்கள் எடுத்தனர். அதே சமயம் இந்திய பவுலர்களுக்கு எதிராக நாங்களும் சிறப்பாக செயல்படுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். அவர்களிடமும் சவாலை கொடுக்கும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இருக்கின்றனர். ஏதேனும் அதை சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வெல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் போது இயற்கையாகும். எனவே ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெறுவதற்கு எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவோம்” என்று கூறினார்.

Advertisement