முழு மூச்சுடன் போராடிய நபி, ரசித் கான் – இலங்கையை அடித்து நொறுக்கியும் நூலிழையில் ஆப்கன் அணி கனவு நொறுங்கியது எப்படி?

AFg vs SL
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 5ஆம் தேதி பாகிஸ்தானின் கஃடாபி நகரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் மோதின. அதில் ஏற்கனவே தன்னுடைய முதல் போட்டியில் வென்று 2 புள்ளிகளை பெற்ற இலங்கையை தம்முடைய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற நிச்சயம் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் எதிர்கொண்டது. அதனால் கிட்டத்தட்ட நாக் அவுட் போல நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் போராடி 291/8 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு பதும் நிசாங்கா 41, திமுத் கருணரத்னே 32, குசால் மெண்டிஸ் அதிரடியாக 92 (84) என டாப் 3 பேட்ஸ்மேன்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி நல்ல ரன்களை குவித்து அசத்தினார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் அஸலங்கா 36 ரன்கள் எடுத்த போதிலும் சமர விக்கிரமா 3, தனஜெயா டீ சில்வா 14, கேப்டன் தசுன் சனாகா 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் கடைசி நேரத்தில் வெல்லலெகே 33* (39) ரன்களும் மஹீஸ் தீக்சனா 28 (24) ரன்களும் அடித்து ஓரளவு சிறப்பான ஃபினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

போராட்ட வீண்:
ஆப்கானிஸ்தான் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக குலாம் 4 விக்கெட்டுகளும் ரசித் கான் 2 விக்கெட்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 37.1 ஓவரில் 292 ரன்களை எடுத்தால் ரன் ரேட் அடிப்படையில் சூப்பர் 4 சுற்று தகுதி பெறலாம் என்ற நிலைமையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் 4, இப்ராஹிம் ஜாட்ரான் 7 என தொடக்க வீரர்கள் கௌசன் ரஜிதா வேகத்தில் அவுட்டாக அடுத்து வந்த குலாம் நைப் 27 ரன்களில் பதிரனா வேகத்தில் ஆட்டமிழந்தார். அதனால் 50/3 என தடுமாறிய அந்த அணிக்கு ரஹீல் ஷா கேப்டன் சஹீதியுடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 45 (40) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஆனால் அப்போது வந்த நட்சத்திர வீரர் முகமது நபி முதல் பந்திலிருந்தே இலங்கை பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி துவம்சம் செய்தார். குறிப்பாக 18.4 ஓவரில் 121/4 என்ற நிலைமையில் களமிறங்கிய அவர் சரவெடியாக விளையாடி 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 65 (32) ரன்கள் விளாசி 26.3 ஓவரில் 201/5 என்ற நிலைமைக்கு கொண்டு வந்து திருப்புமுனையை உண்டாக்கி ஆட்டமிழந்தார்

- Advertisement -

அவரைத் தொடர்ந்து வந்த ஜானத்தும் அதிரடியாக 22 (13) ரன்கள் எடுத்து அவுட்டாக மறுபுறம் சற்று தடுமாறிய கேப்டன் சாகிதி 59 (66) ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டானார். இருப்பினும் மனம் தளராமல் அடுத்து வந்த நஜிபுல்லா ஜாட்ரான் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 23 (15) ரன்கள் விளாசி அவுட்டாக மறுபுறம் நின்ற ரசித் கான் 37வது ஓவரில் வெல்லலெகேவுக்கு எதிராக 3 பவுண்டரிகளை தெறிக்க விட்டார்.

அதனால் தனஞ்செயா வீசிய 38வது ஓவரின் முதல் பந்தில் ஆப்கானிஸ்தானுக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது முஜிப் உர் ரஹ்மான் டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் சூப்பர் நான்கு கனவு நொறுங்கிய நிலையில் அடுத்ததாக வந்த பரூக்கியும் டக் அவுட்டானார். அதனால் எதிர்புறம் ரசித் கான் 27* (16) ரன்கள் எடுத்தும் 37.4 ஓவரில் ஆப்கானிஸ்தானை 289 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் இலங்கை சூப்பர் 4 சுற்றுக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது.

இதையும் படிங்க: தரமான மேட்ச் வின்னர 2023 உ.கோ அணியில் விட்டு தப்பு பண்ணீட்டிங்க – தேர்வுக்குழு மீது ஹர்பஜன் சிங் அதிருப்தி

அந்த அணிக்கு அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 4 விக்கெட்டுகளும் டீ சில்வா, வெல்லலெகே 2 விக்கெட்களும் சாய்த்தனர். அதன் காரணமாக உயிரைக் கொடுத்து போராடியும் ஆப்கானிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Advertisement