IND vs WI : இந்த மாதிரி ஷாட்களை விளையாட நான் தனியா பிராக்டீஸ் பண்றேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று கயானா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் தற்போது இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இருப்பினும் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை 159 ரன்களை குவித்தது. பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டை இழந்தாலும் சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக நல்ல நிலையை எட்டியது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சூரியகுமார் யாதவ் 44 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 83 ரன்கள் அடித்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். அதோடு திலக் வர்மா 49 ரன்களுடனும் ஹார்டிக் பாண்டியா 20-ரன்களுடனும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் அவர்களின் சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் மீது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் கூறுகையில் : இந்த இன்னிங்ஸ் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நான் பவர் பிளேவிலே பேட்டிங் செய்ய சென்றபோது அதிரடியாக விளையாட முயற்சித்தேன். அதுதான் அணி நிர்வாகத்திற்கும் தேவையான ஒன்றாக இருந்தது.

- Advertisement -

நான் பயிற்சியின்போது ரேம்ப் மற்றும் ஸ்கூப் ஷாட் ஆகியவற்றை பயிற்சி செய்கிறேன். அதன் காரணமாகவே என்னால் போட்டியிலும் அதனை செயல்படுத்த முடிகிறது. எனக்கும் திலக் வர்மாவுக்கும் இடையே நல்ல பிணைப்பு இருக்கிறது. அவருடன் நான் நீண்ட நாட்களாகவே இணைந்து விளையாடி வருகிறேன். எனவே அவருடனான அந்த பாட்னர்ஷிப் எனக்கு மிகச் சிறப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க : புதிய 2023 உ.கோ அட்டவணையை வெளியிட்ட ஐசிசி – 9 போட்டிகளில் மாற்றம், இந்தியா – பாக் மேட்ச் எப்போது? விவரம் இதோ

அவர் எதிர்முனையில் நன்றாக விளையாடும் போது அது எனக்கு மேலும் தன்னம்பிக்கையை தருகிறது. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக அவரது இன்னிங்சை கட்டமைத்து சென்றார். ஒரு அணியாகவும் அணியின் கேப்டன் எங்களிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் நான் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement