புதிய 2023 உ.கோ அட்டவணையை வெளியிட்ட ஐசிசி – 9 போட்டிகளில் மாற்றம், இந்தியா – பாக் மேட்ச் எப்போது? விவரம் இதோ

IND vs PAK World Cup
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாலமாக துவங்குகிறது. என்ன தான் டி20 உலக கோப்பை,டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் ட்ராபி மட்டுமல்லாமல் ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் வந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை தீர்மானிக்கும் இந்த 50 ஓவர் தொடருக்கு அன்றும் இன்றும் தனித்துவமான தரமும் ரசிகர்களிடம் மவுசும் இருந்து வருகிறது. மேலும் 1987, 2011 ஆகிய வருடங்களில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இந்த உலக கோப்பையை தங்களுடைய சொந்த மண்ணில் நடத்துவது ஸ்பெஷலாகும்.

அந்த வகையில் வரும் அக்டோபர் 5இல் துவங்கும் இத்தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

புதிய அட்டவணை:
முன்னதாக இந்த தொடருக்கான அட்டவணையை கடந்த ஜூலை மாதம் ஐசிசி மற்றும் பிசிசிஐ வெளியிட்டது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களால் தங்களுடைய அட்டவணையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் உட்பட 3 முழு உறுப்பு நாடுகள் அதிருப்தியை தெரிவித்தன. அத்துடன் நவராத்திரி திருவிழாவின் முதல் நாளிலும் கடைசி நாளிலும் நடைபெறும் போட்டிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்று அகமதாபாத் மற்றும் கொல்கத்தா காவல்துறை கை விரித்தன.

அதன் காரணமாக சில மாற்றங்களை செய்துள்ள பிசிசிஐ தற்போது அப்டேட் செய்யப்பட்ட அட்டவணையை ஐசிசியிடம் சமர்ப்பித்துள்ளது. அதை ஐசிசி வெளியிட்டுள்ள புதிய அட்டவணையின் படி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக அக்டோபர் 14ஆம் தேதி டெல்லியில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்த போட்டி அக்டோபர் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே போல அக்டோபர் 12ஆம் தேதி பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 10ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அக்டோபர் 13ஆம் தேதி லக்னோவில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா மோதும் மிகப்பெரிய போட்டி 24 மணி நேரங்கள் முன்பாக அக்டோபர் 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இத்துடன் சென்னையில் வரும் அக்டோபர் 14ஆம் தேதி நியூசிலாந்து – வங்கதேச அணிகள் மோதுவதாக இருந்த போட்டி தற்போது அக்டோபர் 13ஆம் தேதி பகலிரவு போட்டியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் தரம்சாலாவில் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதுவதாக இருந்த போட்டி 2 மணிக்கு பதிலாக 10.30 மணிக்கு துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக நவம்பர் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆஸ்திரேலியா – வங்கதேசம், இங்கிலாந்து – பாகிஸ்தான் ஆகிய 2 போட்டிகள் நவம்பர் 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

இறுதியாக நவம்பர் 11ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறுவதாக இருந்த இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மொத்தத்தில் 9 போட்டிகள் மாற்றப்பட்டுள்ள இந்த புதிய அறிவிப்பின்படி 2023 உலக கோப்பையில் இந்தியாவின் அப்டேட் செய்யப்பட்ட அட்டவணை இதோ:
1. அக்டோபர் 8 : இந்தியா – ஆஸ்திரேலியா, சென்னை
2. அக்டோபர் 11 : இந்தியா – ஆப்கானிஸ்தான், டெல்லி
3. அக்டோபர் 14 : இந்தியா – பாகிஸ்தான், அஹமதாபாத்
4. அக்டோபர் 19 : இந்தியா – வங்கதேசம், புனே

IND-vs-PAK

இதையும் படிங்க:புதிய 2023 உ.கோ அட்டவணையை வெளியிட்ட ஐசிசி – 9 போட்டிகளில் மாற்றம், இந்தியா – பாக் மேட்ச் எப்போது? விவரம் இதோ

5. அக்டோபர் 22, : இந்தியா – நியூசிலாந்து, தரம்சாலா
6. அக்டோபர் 29 : இந்தியா – இங்கிலாந்து, லக்னோ
7. அக்டோபர் 2 : இந்தியா – இலங்கை, மும்பை
8. அக்டோபர் 5 : இந்தியா – தென்னாப்பிரிக்கா, கொல்கத்தா
9. அக்டோபர் 12 : இந்தியா – நெதர்லாந்து, பெங்களூரு

Advertisement