வெற்றிக்கான அந்த பவுண்டரியை அடிக்கும் முன்னர் பாண்டியா என்கிட்ட சொன்னது இதுதான் – சூர்யகுமார் யாதவ் பேட்டி

Pandya-and-SKY
Advertisement

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலாவதாக நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இழந்த வேளையில் தற்போது டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றிருந்த வேளையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

IND-vs-NZ

இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனாலும் மைதானத்தின் தன்மையை சுதாரிக்க முடியாமல் இந்திய அணியிடம் வசமாக சிக்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூரியகுமார் யாதவ் 31 பந்துகளில் 26 ரன்கள் குவித்த இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தன்னுடைய ஆட்டம் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ் கூறுகையில் :

IND vs NZ Hardik Pandya

இன்றைய போட்டியில் நான் விளையாடிய விதம் மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. ஏனெனில் மைதானத்தில் உள்ள சூழ்நிலையை நாம் கருத்தில் கொண்டு விளையாட வேண்டியது அவசியம். அந்த வகையில் நான் இன்று பேட்டிங் செய்ய களமிறங்கும் போது மைதானத்தின் தன்மை சற்று வித்தியாசமாக இருந்தது. அதனால் இறுதி வரை கொண்டு சென்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

அந்த வகையில் இறுதிவரை போட்டியை கொண்டு சென்று வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த போட்டியின் இறுதிக்கட்டத்தை நோக்கி நாங்கள் செல்லும் பொழுது பொறுப்பாக விளையாடினோம். அதிலும் குறிப்பாக வெற்றிக்கான அந்த கடைசி பவுண்டரியை அடிக்கும் முன்னர் ஹார்டிக் பாண்டியா என்னிடம் வந்து : “இந்த பந்தில் நீ போட்டியை ஃபினிஷ் செய்ய வேண்டும்” கண்டிப்பாக அது உன்னால் முடியும் என்று அவர் எனக்கு நம்பிக்கை அளித்தார்.

இதையும் படிங்க : IND vs NZ : 3வது போட்டியில் வெல்வதற்கு சுப்மன் கில் இடத்தில் அவருக்கு சான்ஸ் கொடுங்க – டேனிஷ் கனேரியா கோரிக்கை

அதன்படியே நான் அந்த பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மிகவும் மகிழ்ச்சி என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement