IND vs NZ : 3வது போட்டியில் வெல்வதற்கு சுப்மன் கில் இடத்தில் அவருக்கு சான்ஸ் கொடுங்க – டேனிஷ் கனேரியா கோரிக்கை

Danish Kaneria INDia
Advertisement

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பி தோற்ற இந்தியா 2வது போட்டியில் வெறும் 100 ரன்களை துரத்தும் போது கடுமையாக போராடி கடைசி ஓவரில் வென்றது. இந்த 2 போட்டிகளிலும் இந்தியாவின் தடுமாற்றத்திற்கு டாப் ஆர்டரில் இடம் வகிக்கும் சுப்மன் கில், இஷான் கிசான், ராகுல் திரிபாதி போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக 7, 11 என 2 போட்டிகளிலுமே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான சுப்மன் கில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது என்பதை தெரிந்தும் தவறான ஷாட்டை அடித்து ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினார்.

Shubman Gill 1

கடந்த 2019லேயே ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் கடந்த நவம்பரில் தான் அறிமுகமானார். அந்தளவுக்கு ஆரம்பம் முதலே டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வரும் அவர் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் அதிக ரன்களை குவித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியதால் ஒருவழியாக இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரிலேயே பெரிய ரன்களை குவித்தாலும் அதை அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுப்பது அவரிடம் ஆரம்பம் முதல் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது.

- Advertisement -

அவருக்கு சான்ஸ் கொடுங்க:
சமீபத்திய இலங்கை தொடரிலும் 7, 5 என முதலில் 2 போட்டிகளில் தடுமாறிய அவர் கடைசி போட்டியில் 46 ரன்கள் எடுத்தாலும் அதை குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. இந்நிலையில் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறும் அவருக்கு பதிலாக 3வது போட்டியில் உடல் எடையை குறைத்து உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு போராடி 550 நாட்கள் கழித்து இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ள பிரிதிவி ஷா’க்கு வாய்ப்பு கொடுக்குமாறு முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

Hardik Pandya Prithvi Shaw

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அடுத்ததாக கடைசி போட்டி நடைபெறும் நிலையில் சுப்மன் கில் எப்படி விளையாடுகிறார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். மறுபுறம் பிரிதிவி ஷா மிகவும் சுவாரசியமான வீரர். அவர் எப்படி எதிரணியை அட்டாக் செய்து விளையாட வேண்டும் என்பதை அறிந்தவர். எனவே சுப்மன் கில் இடத்தில் அவருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்கலாம். ஷா’வுக்கு திறமை இருக்கிறது. அவர் தொடர்ந்து விளையாடினால் நிச்சயம் நிறைய அற்புதமான வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார். சுப்மன் கில் சிறப்பான வீரர் என்பதில் சந்தேகமில்லை”

- Advertisement -

“ஆனால் அவர் தன்னுடைய பேட்டிங்கில் சில முன்னேற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக சுழல் மற்றும் பவுன்ஸ் ஆகிய பந்துகளை சிறப்பாக எதிர்கொள்வதற்கு அவர் வேலை செய்ய வேண்டியுள்ளது. 2வது போட்டியில் இந்தியா வென்றாலும் இத்தொடரை வெல்வதற்கு அவர்கள் நிறைய முன்னேற்றத்தை காண வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக கடினமான சூழ்நிலைகளில் அசத்தும் வகையில் அவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண வேண்டும்”

Kaneria

“ஒருவேளை நீங்கள் இஷான் கிசானை நீக்கினால் பின்னர் யார் விக்கெட் கீப்பிங் செய்வார். எனவே விக்கெட் கீப்பிங் செய்யும் பேட்ஸ்மேன் அவசியமாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல் பிரிதிவி ஷா ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 போட்டிகளில் முதல் ஓவரிலிருந்தே அதிரடியான பவுண்டரிகளை பறக்க விடும் திறமை கொண்டவர். எடுத்துக்காட்டாக 2வது போட்டியில் 100 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அவரைப் போன்ற வீரர் ஆரம்பத்திலேயே அதிரடியான பவுண்டரிகளை விளாசி 30 ரன்களை எடுத்தால் வெற்றி மிகவும் எளிதாகி விடும்.

இதையும் படிங்க: உண்மையிலே சொல்றேன். என்னோட பேட்டிங் கோச் இவர்தான் – சாஹலுடன் உரையாடிய சூரியகுமார் யாதவ்

மறுபுறம் இஷான் கிசான் தடுமாறினாலும் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருவதால் அவருக்கு பதிலாக சுப்மன் கில் இடத்தில் பிரிதிவி ஷா’க்கு தாராளமாக வாய்ப்பு கொடுக்கலாம். எனவே கடந்த 2 போட்டிகளிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று ரசிப்பார்கள் எதிர்பார்த்த நிலையில் கடைசி போட்டியில்லாவது வாய்ப்பு கொடுங்கள் என்று டேனிஷ் கனேரியா கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

Advertisement