IND vs NZ : நியூசிலாந்துக்கு எதிரான இந்த வெறித்தனமான ஆட்டத்திற்கு காரணம் இதுதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

Suryakumar-Yadav-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சூரியகுமார் யாதவ் திகழ்ந்தார். ஏனெனில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் தனி ஒருவராக களத்தில் இருந்த சூரியகுமார் யாதவ் பின்வந்த அனைத்து வீரர்களுடனும் அற்புதமான பாட்னர்ஷிப்பை அமைத்து பேட்டிங்கில் வெளுத்து வாங்கினார்.

Suryakumar-Yadav

- Advertisement -

மொத்தம் 51 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 111 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். நியூசிலாந்து வீரர்கள் இந்த போட்டியில் வீசிய பந்துகளை எங்கெல்லாம் அடிக்க முடியுமோ அங்கெல்லாம் பறக்கவிட்டு மீண்டும் ஒருமுறை தான் உலகின் நம்பர் ஒன் டி20 பிளேயர் என்பதையும், 360 டிகிரி பேட்ஸ்மேன் என்பதையும் அவர் இந்த ஆட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

நேற்றைய போட்டி முடிந்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூட இதுபோன்று ஒருவர் விளையாடி நான் பார்த்ததில்லை என்றும் உலகின் நம்பர் 1 வீரர் சூரியகுமார் யாதவ் என்பதற்கு இந்த இன்னிங்க்ஸ் ஒரு சான்று என்றும் அவரை மனதார பாராட்டியிருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற சூரியகுமார் யாதவ் தனது இந்த வெறித்தனமான ஆட்டம் குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

Suryakumar Yadav.jpeg

என்னுடைய திட்டம் எல்லாம் மிகவும் தெளிவாக இருந்தது. போட்டியில் 12வது மற்றும் 13வது ஓவரின் போது நான் இறுதிவரை பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்படி நான் இறுதிவரை பேட்டிங் செய்ய செய்தால் நிச்சயம் 170 முதல் 175 ரன்கள் வரை கொண்டு செல்ல முடியும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கும் மேலாக கூடுதலாக ரன்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. எல்லோரும் என்னுடைய வித்தியாசமான ஷாட்டுகள் குறித்து நிறைய பேசி வருகின்றனர்.

- Advertisement -

நான் அவ்வாறு விளையாட காரணம் யாதெனில் : என்னுடைய பேட்டிங்கை நான் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். அதோடு ப்ராக்டிஸ்-இன் போது நான் இதேபோன்று பல வித்தியாசமான ஷாட்டுகளை முயற்சி செய்து அங்கேயும் அதிரடியாகவும், ஆக்ரோஷமாகவும் தான் விளையாடுவேன். அந்த வகையில் வலைப்பயிற்சியில் நான் எதனை பயிற்சி செய்கிறேனோ அதையே தான் போட்டியிலும் செயல்படுத்துகிறேன்.

இதையும் படிங்க : IND vs NZ : 2ஆவது போட்டியில் நான் பந்துவீசாமல் தீபக் ஹூடாவை பந்துவீச வைத்தது ஏன்? – பாண்டியா விளக்கம்

அதன் மூலம் தான் எனக்கு நிறைய பவுண்டரிகள் கிடைப்பதாகவும் நினைக்கிறேன். இறுதியில் எனது பங்களிப்பில் இந்திய அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இனிவரும் போட்டிகளிலும் என்னுடைய திட்டத்தையும், என்னுடைய கிரிக்கெட் ஷாட்டுகளிலும் தெளிவாக இருந்து அணியின் வெற்றிக்கு உதவுவேன் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement