IND vs NZ : 2ஆவது போட்டியில் நான் பந்துவீசாமல் தீபக் ஹூடாவை பந்துவீச வைத்தது ஏன்? – பாண்டியா விளக்கம்

Deepak-Hooda-and-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முக்கியமான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது சூரியகுமார் யாதவின் அட்டகாசமான சதம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது.

Suryakumar Yadav.jpeg

- Advertisement -

பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் அனைத்து விட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே குவித்ததால் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக பகுதிநேர சுழற்பந்து வீச்சாளரான தீபக் ஹூடா 2.5 ஓவர்கள் வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ஹார்டிக் பாண்டியா ஆல்ரவுண்டாக இருந்தும் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை. மேலும் அவருக்கு பதிலாக நேற்று தீபக் ஹூடா மூன்று ஓவர்கள் வரை வீசியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.

Deepak-Hooda-1

இந்நிலையில் நேற்றைய போட்டியில் தான் ஏன் பந்து வீசவில்லை என்றும் தீபக் ஹூடா ஏன் பந்து வீசினார் என்பது குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா போட்டிக்குப் பிறகு பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் போதுமான அளவு தற்போது பந்துவீசி வருவதாக நினைக்கிறேன். அதனால் இந்த போட்டியில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டேன். மேலும் நான் பந்து வீசாமல் மற்றவர்களை பந்து வீச வைப்பதன் காரணம் யாதெனில் : இந்திய கிரிக்கெட் அணியில் அதிகப்படியான பவுலிங் ஆப்ஷன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எல்லா போட்டிகளிலும் இது செட்டாகாது என்றாலும் பேட்ஸ்மன்களும் பந்து வீச வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இதையும் படிங்க : நான் டி20 ப்ளேயர் மட்டும் இல்ல, என்னோட அடுத்த டார்கெட் அதுதான் – சூரியகுமார் பேசியது என்ன?

அந்த வகையில் தீபக் ஹுடாவிற்கு நான் நேற்றைய போட்டியில் பந்து வீச வாய்ப்பளித்தேன். பேட்ஸ்மன்களும் பகுதி நேரமாக பந்து வீசும் பட்சத்தில் அது அணிக்கு நிறைய ஆப்ஷன்களை அளிக்கும். அந்த வகையில் தான் பேட்ஸ்மேன்களை பரிசோதிக்கவே பந்துவீசும் வாய்ப்பை தீபக் ஹூடாவிற்கு நேற்றைய போட்டியில் வழங்கி நான் பந்து வீசாமல் ஓய்வெடுத்துக் கொண்டேன் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement