MI vs KKR : ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயராக விளையாட காரணம் இதுதான் – சூரியகுமார் யாதவ் விளக்கம்

SKY-and-Rohit
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் போட்டியானது நேற்று மதியம் மும்பை வான்கடடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் இடம்பெறாததால் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி கொல்கத்தா அணிக்கெதிரான இந்த போட்டியில் களம் இறங்கியது.

KKR vs MI

- Advertisement -

ஆனால் முதல் பாதியில் விளையாடாத ரோகித் சர்மா கொல்கத்தா அணி 185 ரன்கள் குவித்ததும் அடுத்ததாக மும்பை அணி சேசிங் செய்ய வருகையில் இம்பேக்ட் பிளேயராக துவக்க வீரராக இஷான் கிஷனுடன் அதிரடியான துவக்கத்திற்கு வழி வகுத்து கொடுத்தார். அந்த வகையில் இம்பேக்ட் பிளேயராக களம் புகுந்த ரோகித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் அடிக்க உதவி புரிந்தார்.

இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி என 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணியின் கேப்டனான அவர் நேற்றைய போட்டியில் இப்படி பிளேயிங் லெவனில் விளையாடாமல் இம்பேக்ட் பிளேயராக கலந்து கொண்டது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா ஏன் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார் என்பது குறித்து மும்பை அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் போட்டி முடிந்து தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Rohit Sharma

நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்துவீசவே விரும்பினோம். ஏனெனில் மைதானம் கொஞ்சம் டிரையாக இருந்ததால் இரண்டாவது பேட்டிங்கிற்கு மைதானம் நன்றாக ஒத்துழைக்கும் என்று நினைத்தோம். அதன்படியே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தோம். ரோகித் சர்மாவிற்கு இந்த போட்டிக்கு முன்னதாக வயிற்று பகுதியில் சற்று அசவுகரியம் ஏற்பட்டது.

- Advertisement -

அதனாலேயே அவர் இந்த போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. பின்னர் அவர் சேசிங்கின் போது இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார் என்று சூரியகுமார் யாதவ் விளக்கம் அளித்தார். இந்த போட்டியில் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கியதன் மூலம் ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : IPL 2023 : இதுல ரிங்கு சிங் மாதிரி 4 சிக்ஸர் அடிப்பேன்னு எகத்தாலம் வேற, வாயில் மட்டும் பேசிய ரியான் பராக்கை கலாய்க்கும் ரசிகர்கள்

அத்துடன் போட்டி முடிந்த பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியின் போதும் கேப்டனாக சூரியகுமார் யாதவ் கலந்து கொண்டார். ஏனெனில் இம்பேக்ட் பிளேயராக விளையாடும் வீரர் கேப்டனாக இருந்தாலும் அந்த போட்டியில் யார் டாசின் போது கேப்டனாக இருக்கிறார்களோ அவர்களே முழுநேர கேப்டனாக இருப்பார்கள் என்பதனால் சூரியகுமார் யாதவே பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement