நேற்றைய போட்டியில் சூரியகுமார் யாதவ் மைதானத்துக்கு கூட வரவில்லையாம் – விளையாடாதது ஏன் ?

Sky
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான 2-வது லீக் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் விளையாடாதது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் மிடில் ஆர்டரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய இந்தியாவின் 360 என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் வருத்தத்தைத் தந்தது.

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணி வீரர்களின் அசத்தலான பந்துவீச்சு காரணமாக 20 ஓவர்களின் முடிவில் வெறும் 110 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் 111 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் டாசின் போதே சூர்யகுமார் யாதவ் ஏன் விளையாடவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் கோலி அந்த காரணத்தை வெளிப்படுத்தினார். அதுகுறித்து அவர் கூறுகையில் : புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சூரியகுமார் யாதவிற்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாததன் காரணம் குறித்து பேசிய அவர் : சூர்யகுமார் யாதவ் பின் முதுகில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு காரணமாக விளையாடவில்லை என்றும் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் துவக்க வீரராக விளையாடுவார் என்றும் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : துவக்கமே சொதப்பல். தவறாக முடிந்த கேப்டன் கோலியின் திட்டம் – இந்திய அணி தடுமாற்றம்

மேலும் இது குறித்து பி.சி.சி.ஐ-யும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் விளக்கத்தை வெளியிட்டிருந்தது அதன்படி சூர்யகுமார் யாதவ்-க்கு பின்முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக பிசிசிஐ மருத்துவக்குழு அவரை ஹோட்டலிலேயே தங்கியிருக்குமாறு கூறியதாக அவர்கள் தங்களது ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement