துவக்கமே சொதப்பல். தவறாக முடிந்த கேப்டன் கோலியின் திட்டம் – இந்திய அணி தடுமாற்றம்

rohith
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீசுவதாக தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களை கோலி செய்திருந்தார்.

opening

- Advertisement -

ஆனால் அந்த மாற்றமே தற்போது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடி வந்த ரோகித் சர்மாவிற்கு பதிலாக ராகுலுடன் இஷான் கிஷனை கோலி துவக்க வீரராக அனுப்பினார். பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 8 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு மூன்றாவது வீரராக ரோகித் சர்மா களமிறங்க ராகுல் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக இந்திய அணி பவர் பிளே முடிவிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதனைத் தொடர்ந்து எட்டாவது ஓவரில் 14 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மாவும் ஆட்டமிழந்தும் வெளியேற தற்போது இந்திய அணி ஆனது 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

Kohli

இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் அரையிறுதிக்கான வாய்ப்பிலும் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே துவக்க வீரராக ஆடிவந்த ரோகித் சர்மாவை மூன்றாவது இடத்தில் இறக்கியது தவறு என்ற எண்ணமும் எழத்தான் செய்கிறது.

Advertisement