ஹார்டிக் பாண்டியா விளையாடாதது பெரிய இழப்பு தான். ஆனா அவரோட இடத்தை நிரப்பப்போவது – யார் தெரியுமா?

Hardik-Pandya
- Advertisement -

அண்மையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக புனே நகரில் நடைபெற்று முடிந்த நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது நான்காவது வெற்றியையும் பெற்றது. அதோடு இந்த உலககோப்பை தொடருக்கான புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தது.

இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த ஹார்டிக் பாண்டியா நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை அக்டோபர் 22-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கும் போட்டியில் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே பிசிசிஐ சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஹர்டிக் பாண்டியா அப்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத சூழலில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவரது இடத்தை நிரப்புப்போகும் வீரர் யார்? என்பது குறித்த கேள்வியே அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.

ஹார்டிக் பாண்டியா பேட்டிங்கில் அதிரடியாக செயல்படுவது மட்டுமின்றி பந்துவீச்சாளராகவும் அசத்தக்கூடியவர். எனவே அவரது இந்த காயம் இந்திய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக என்று பார்க்கப்படும் வேளையில் அவரது இடத்தை நிரப்பப்போகும் அந்த வீரர் யார்? என்ற கேள்வி அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் பாண்டியா தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சை பெற்று பிசிசிஐ-யின் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் வேளையில் அவரது இடத்தை கூடுதலாக ஒரு பேட்டரை வைத்து நிரப்ப இந்திய அணியின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் சூரியகுமார் யாதவ் தான் ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக ஆறாவது இடத்தில் விளையாடுவார் என்று தெரிகிறது. ஏனெனில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடக்கூடிய சூரியகுமார் யாதவ் அசாத்தியமான இலக்கையும் துரத்தும் தன்மை வாய்ந்தவர்.

இதையும் படிங்க : நாளைய நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

அதோடு முதலில் பேட்டிங் செய்தாலும் இந்திய அணி பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல நிச்சயம் அவரது அதிரடி உதவும். இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியாவின் இடத்தை சூரியகுமார் யாதவ் தான் பூர்த்தி செய்வார் என்று தெரிகிறது. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியை தவறவிட இருக்கும் பாண்டியா அதன் பிறகும் சில நாட்கள் ஓய்வு தேவைப்படும் பட்சத்தில் அதற்கடுத்தும் சில போட்டிகளை இழக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement