நாளைய நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND-vs-NZ
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் இந்திய அணி பங்கேற்று விளையாடியுள்ள 4 லீக் போட்டிகளில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

அந்த வகையில் இந்த தொடரில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் என நான்கு அணிகளை மிகவும் கச்சிதமாக வீழ்த்திய இந்திய அணியானது அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் நாளை அக்டோபர் 22-ஆம் தேதி நியூசிலாந்து அணியை தர்மசாலா நகரில் எதிர்கொள்ள இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் நாளைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

கடந்த போட்டியில் காயமடைந்த ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக பேட்டிங்கில் கூடுதலாக சூரியகுமார் யாதவை சேர்க்க வாய்ப்புள்ளது. அதேபோன்று பந்துவீச்சு துறையில் சொதப்பி வரும் ஷர்துல் தாகூருக்கு பதிலாக முகமது ஷமி இணைய வாய்ப்புள்ளது. அதை தவிர்த்து இங்கு வேறு எந்த மாற்றமும் பெரிதாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாளைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஒரே கேட்ச் தான். ஒட்டுமொத்த ஆட்டமும் க்ளோஸ். பாகிஸ்தான் அணியின் தோல்வி – அங்கேயே கன்பார்ம் ஆயிடுச்சி

1) சுப்மன் கில், 2) ரோஹித் சர்மா, 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) குல்தீப் யாதவ், 9) முகமது ஷமி, 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement